ஏரியா லிட்ரேச்சர்என்னென்ன தவம் செய்தேன் அம்மா!

மொதல் மாசம்
உன் முகம்
சிவந்ததம்மா...
ரெண்டாம் மாசத்திலே
நீ புரண்டு
படுத்தாயம்மா...
மூணாம் மாசத்திலே
உன் முதுகெலும்பு
நலிந்ததம்மா!

உன் ஒரு
சாண் வயிற்றிலே
கருவானது முதலா
என்னென்ன
தவம்
செய்தேன் அம்மா...

நாலாம்
மாசத்திலே
நரம்புகள்
தளர்ந்ததம்மா...
ஐந்தாம் மாசத்திலே
ஆய்ந்து ஓய்ந்து
சாய்ந்தாயம்மா!

ஆறாம் மாசம்
உன் அடிவயிறு
கனத்ததம்மா...
ஏழாம் மாசம்
எலுமிச்சை
உனக்கு
இனித்ததம்மா...
எட்டாம் மாசத்திலே
நான் எட்டி எட்டி
உதைத்தேனம்மா!

ஒன்பதாம்
மாசம் உன்
தாய்வீட்டு
சீமந்தமம்மா...
பத்தாம் மாசம்
பனிக்குடம்
உடைஞ்சதம்மா!

என்ன தவம்
செய்தேன்
அம்மா
உன் வயிற்றில்
பிறக்க..!

சீத்தலைப் பாட்டனார்