கவிதை வனம்
 பரிசு நீ பரிசளித்த புத்தகங்களை திறந்தபோது மேசை மீது கொட்டி குவிகிறது பக்கங்களில் பதுக்கி வைத்த மயிலிறகும் பென்சில் துருவல்களும்
கூடவே குட்டிகளீன்ற சகஸ்ர முத்தங்களும் மொத்தமும் எனை மூர்க்கமாய் மூடி போர்த்துகின்றன. ஆங்கில படங்களில் வருகின்ற வேற்றுகிரக ஜீவராசிகளைப் போல.
- ஜெயநதி
இடமாற்றம்
மனம் பிசையும் ஓவியம் ஒன்றை இடம் மாற்றி வைத்தேன் இப்போது ஓவியம் இருந்த இடத்தின் வெற்றிடம் இம்சித்துக் கொண்டிருக்கிறது.
- ரா.பிரசன்னா
|