என்ன பழக்கமோ..?!



இப்படி வீட்டில் இருப்பவர்கள் தலையில் அடித்துக்கொள்ளும் அளவு சில பழக்கங்கள் நம்மிடம் இருக்கும். ஆனால், ‘இதுல என்ன இருக்கு..?’ என நாம் காலரை உயர்த்துவோம். அப்படி என்ன பழக்கம் நம்மிடம் இருக்கின்றது..?
இப்படிக் கேட்டு -

* குளிச்சுட்டு வந்து பல்லு விளக்குவது...
* பால் சோறுல ஜீனி கலந்து சாப்பிடுறது...

என தன் பழக்கத்தை ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாக ‘இந்திரா கிறுக்கல்கள்’ என்பவர் இட... அதற்கு வந்த மறுமொழிகளில் சில மட்டும் இங்கே!

@திருமதி பிரியா:
துணி துவைச்சு
காய்ந்த பிறகு
ஒவ்வொரு துணியா மோந்து பார்த்துட்டு மடிச்சு வைப்பேன்.
ஏன்னு காரணம்
தெரியாது!

@Karthick Sharma: காபி சாப்ட்ட ஒடனே தண்ணி குடிக்கறது...

@மதி எஸ்:
சாப்பிட்டவுடன் sweet
சாப்பிடறது!

@Mathan Kumar G:
நடந்துட்டே
போன் பேசுறது...
என்னையே
மறந்து
ரொம்ப தூரம்
போயிருக்கேன்!

@Manivannan Nadarajan: ஆர்லிக்ஸ அப்படியே திங்கறது, ஊறவச்ச அரிசில சக்கர கலந்து திங்கறது!

@Gowrisankar Gunasekaran: ‘டீ’ல, பொறி கலந்து ஊறவெச்சு சாப்பிடுறது... ‘பொறி’ல தேங்கா
எண்ணெய் ஊத்தி சாப்பிடுறது..!

@Sathish Sangkavi: கறிக்குழம்பில் தயிர் ஊத்தி தின்பது!

@Suba Aswin:
காபியில முறுக்கு உடைச்சு
போட்டு சாப்பிடுவேன்!

@Mohammad Basheer:
சாப்பிட்டு டீ
குடிக்கிறது!

@Antony Raj: அரிசிப் புட்டில் வாழைப்பழம் பிசைந்து அதற்கு மேலே காபி ஊற்றி சாப்பிடுவது!

@Rmr Rafiq:
படம்
பார்க்காமலே விமர்சனம் பண்றது..!

@Venkat Gokulathil Suriyan:
இட்லிக்கு
சைடு டிஷ்ஷா
மிக்சர் வெச்சி
சாப்பிடறது..!

@Seyon
Mayon:
சாப்டுட்டு
பல்
தேய்க்கறது..!

@Thavakkumar L: மிளகாய்ப் பொடி
சாதம் உண்பது...

@Shankar Veera: டீல பிரட் பஜ்ஜி தொட்டு சாப்பிடுவேன்!

இந்திரா