ஏரியா லிட்ரேச்சர்
மீன் புடிக்க கத்துத்தாங்க!
 பசிக்கு ஒருவேளை மீன் வாங்கித்தர வேணாம் மீன் புடிக்க கத்துத் தாங்க புடிச்சி, வித்து பொழைச்சுக்கறோம் ராசா!
நாஷ்டா துன்னு நாளாச்சி நான் நல்லா தூங்கி நாளாச்சி கம்ப்யூட்டர் படிச்சவனுக்கே வேலையில்ல கைரிச்சா வலிப்பவன் என்னாத்துக்காவேன்?
டெல்லியை ஆளுற ராசாங்களா ஏழைங்க கண்ணீரை கொஞ்சம் பார்ப்பீங்களா கூரைக்கு ஓலை மாத்த பணமில்லே பொண்டாட்டிக்கு சேலை வாங்கித்தரவும் துட்டு இல்லே
அஞ்சி வருஷத்துக்கு ஒருமுறை வருது எலெக்ஷனு அப்போ மட்டும்தானா எங்களுக்கு கலெக்ஷனு
*சீத்தலைப் பாட்டனார்
|