சூப்பர்!ரீடர்ஸ் வாய்ஸ்

கஜா புயல் எச்சரிக்கையை அலட்சியம் செய்து ஆமைவேகத்தில் செயல்படும் முதல்வரைப்
பெற்றிருப்பது தமிழகத்தின் சாபக்கேடு.
- ராஜ்குமார், குன்னூர்; நரசிம்மராஜ், மதுரை; முரளிதரன், மதுரை; த.சத்தியநாராயணன், அயன்புரம்; வளையாபதி, தோட்டக்குறிச்சி; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; முருகேசன், கங்களாஞ்சேரி; கைவல்லியம், மானகிரி.

59 நிமிடத்தில் கடன் என அறிவித்து கார்ப்பரேட் ஊழலைப் பெருக்கும் இந்திய அரசின் நடவடிக்கையைச் சுட்டிக்காட்டியது சூப்பர்.
- சாந்தா, மதுரை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; ராஜ்குமார், குன்னூர்; சைமன்தேவா, விநாயகபுரம்; நஞ்சையன், பொள்ளாச்சி; கைவல்லியம், மானகிரி.

‘நம் நம்பிக்கை லெவலை ஒட்டித்தான் படம்’ என வெற்றி ரகசியம் சொன்ன லிங்குசாமியின் அனுபவக் கட்டுரை அருமை.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி; நரசிம்மராஜ், மதுரை; முரளிதரன், மதுரை; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

நித்யஸ்ரீ மகாதேவனின் பேட்டி அவர் குரல் போலவே கணீரென ஒலித்தது.
- ஜனனி கார்த்திகா, திருவண்ணாமலை; சைமன்தேவா, விநாயகபுரம்; லட்சுமிநாராயணன், வடலூர்; கைவல்லியம், மானகிரி; சத்தியநாராயணன், அயன்புரம்; நரசிம்மராஜ், மதுரை; சாந்தா, மதுரை.

உத்தரகாண்ட் மாநிலப் பொறியாளர் சுபெந்து ஷர்மாவின் காடுவளர்ப்பு ஐடியா அசரவைத்தது.
- என்.மகேஸ்வரி, பொள்ளாச்சி; மனோகர், கோவை; பூதலிங்கம், நாகர்கோவில்; மாணிக்கவாசகம்,
கும்பகோணம்.

ராப் இசையில் மக்கள் பிரச்னைகளை உலக அரங்கில் பாடி போராடிய மாதங்கி மாயாவின் வாழ்க்கை பிரமிக்க வைத்தது.
- அக்‌ஷயாமாறன், திருவண்ணாமலை; சண்முகராஜ்,  திருவொற்றியூர்.

போலிப்பட்டங்களை காசுகொடுத்து வாங்கி மக்களைக் காவு வாங்கும் போலிகளைத் துகிலுரிக்கிறது சரவணன்சந்திரனின் சித்து விளையாட்டு.
- தா.சைமன்தேவா, விநாயகபுரம்; வரலக்ஷ்மி முத்துசாமி, கொளத்தூர்.

இயற்கையோடு இணைந்து வாழச்சொல்லிய ஓஷோவின் கருத்து, மந்திரச்சொல்லாக மனதில் பதிந்தது.
- வி.ஆர்.நடராஜன், திருமுல்லைவாயல்; இளம்வழுதி, அத்திப்புலியூர்.

மூடநம்பிக்கை எப்படி பூப்பெய்திய பெண்ணைக் கொன்றது என்று விவரித்த நியூஸ் வியூஸ், மனதை அதிரவைத்து விட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; மனோகர், கோவை; மனோகா, திருச்சி; முருகேசன், கங்களாஞ்சேரி; தேவா, கதிர்வேடு.

நெஞ்சை இனிக்கச் செய்தது குங்குமம் தந்த நயனின் ஐந்து பன்ச்சுகள்.
- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்.