பெண்கள் வயாக்ரா ரெடி!“ஆண்களைப் போலவே பெண்களுக்கும் செக்ஸ் ஆசை குறைபாடு ஏற்படும். கவலை வேண்டாம். அதனைத் தீர்க்க எங்களிடம் புது மாத்திரை உண்டு!”
இப்படி அமெரிக்க தொழிலதிபர் சிண்டி ஊர் முழுக்க தன் மாத்திரைக்கு (Flibanserin-Addyi) விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சர்ச்சைகள் சிண்டியின் பிங்க் நிற மாத்திரைகளைச் சுற்றி வந்தாலும் மக்கள் ஆசையாக மாத்திரைகளை வாங்கியதில் விற்பனை வருமானம் ஒரு பில்லியனைத் தாண்டி எகிறியுள்ளது. வடக்கு கரோலினாவின் ராலேவிலுள்ள ஸ்ப்ரௌட் நிறுவனம் மூலம் சிண்டி எகெர்ட் அறிமுகப்படுத்திய பெண்கள் வயாக்ரா (Addyi) இவரை உலகெங்கும் லைம்லைட்டில் நிறுத்தியுள்ளது.

எஃப்டிஏவின் இருமுறை அங்கீகாரம் மறுப்பு, செக்ஸ் விருப்ப குறைவு, நோயல்ல என்ற அறிவியலாளர்களின் தீவிர விமர்சனம் ஆகியவற்றைக் கண்டுகொள்ளாமல் ஐரோப்பாவுக்கு பயணித்து இண்டு இடுக்கு விடாமல்  பெண்கள் வயாக்ராவை விளம்பரப்படுத்தி வருகிறார்.
இவரின் பிங்க் சீலிங் என்ற முதலீட்டு நிறுவனம் பெண்களுக்கான பல்வேறு தயாரிப்புகளில் (கர்ப்ப சோதனை, தாய்ப்பால் பொருட்கள்) பணத்தை கொட்டி வருகிறது.

“ஆண்களின் பாலுறுப்பில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பது போல ஆட்யி செயல்படுவதில்லை. மூளையிலுள்ள டோபாமைனைத் தூண்டி செரடோமினை கட்டுப்படுத்துவதன் வழியாக பாலுறவு ஆசையைத் தூண்டுகிறது...” என்கிறார் சிண்டி. இவரை பல்வேறு குறைகள் சொல்லி நீக்கிய வேலியன்ட் நிறுவனம், பெண்கள் வயாக்ராவுக்கான ஆராய்ச்சிக்கு வலியவந்து நிதியுதவிகளை வழங்கியுள்ளது!

கடந்தாண்டில் மட்டும் சிண்டியின் விளம்பர மேஜிக்கில் பெண்கள் வயாக்ராவின் விற்பனை ரூ.70 கோடியே 39 லட்சத்து 50 ஆயிரம் என விற்பனையில் சாதித்தது. தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனை பெறுவதற்கும், டோர் டெலிவரி செய்வதற்குமான மெகா பிளானில் இப்போது பரபரக்கிறார்
 சிண்டி.

ச.அன்பரசு