PORN STAR மியா ராய் இந்தப் படத்துல அறிமுகமாகறாங்க!
‘‘கலகல கிளுகிளுனு ஒரு சினிமா. யோசிக்கவிடாமல் அருமையா பொழுதைக் கழிக்கிற மாதிரியும் இருக்கணும். இன்னிக்கு இருக்கிற இளம் ரசிகர்களுக்குப் பிடிக்கிற மாதிரியும் இருக்கணும். வெளிநாட்டில் carry on சீரிஸ்னு வரும். ‘போலீஸ் அகாடமி’ பார்த்திருப்பீங்க. கொஞ்சம் கிளாமர் கலந்து வேடிக்கையும், சிரிப்புமா குதூகலமா இளமையா போகும். அதுமாதிரிதான் செய்யணும்னு நினைச்சேன்.
 2016ல் தெலுங்கில் ‘குண்டூர் டாக்கீஸ்’னு ஒரு படம் பெரிய ஹிட். அந்தக் கதையையே ரீமேக் செய்றோம். சாதாரண மனிதர்களின் சுவாரஸ்யமும் இதுல இருக்கு. கிளாமர், காமெடி, ரொமான்ஸ்னு படம் செழிப்பா போகும். ஆக, ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ ஒரு ஜாலி படம்தான்...’’ நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முகேஷ். இயக்குநர் எம்.ராஜேஷின் சீடர்.கிளாமர் ரொம்ப தூக்கலா இருக்குமோ...

கிளாமர் 100%, காமெடி 100%னு சொல்லித்தான் படத்தையே ஆரம்பிச்சோம். படம் பார்த்தா சும்மா திருவிழா பார்த்த மாதிரி சந்தோஷமா இருக்கும். மெய்மறந்து சந்தோஷமாக வீட்டிற்குத் திரும்புவீங்க.
ஒரு மெடிக்கல் ஸ்டோர். அதில் விமலும், சிங்கம்புலியும் வேலை செய்றாங்க. மெடிக்கல் ஷாப்பில் ேவலை செய்ற நேரம் போக குட்டி குட்டியாக திருடுவாங்க. அவங்களுக்கு பெரிசா திருடினால் போலீஸ் புடிச்சுக்குவாங்கன்னு பயம். அதனால் சோப்பு டப்பா, கொசு பேட் மாதிரியானவைகளைத் திருடி கடையில் போட்டு செலவுக்கு வைச்சுக்குவாங்க.
அப்படிப்பட்டவங்க ஒருநாள் திருடப் போக, ஒரு பெரிய பொருள் கையில் வந்திடுது. அது அவங்களுக்கே தெரியாது. இந்த விஷயம் சுத்தியிருக்கிற நாலு டீமிற்கு தெரிய, இவர்களைத் துரத்துவார்கள். கடைசியில் என்னவாகிறது என்பதுதான் கதை.  இதுல எப்படி விமல்..?அவருக்கு இதில் நிறைய ஸ்கோப். விமலுக்கு காமெடி வரும். ஆனால், இவ்வளவு காமெடி வருமான்னு உங்களுக்கே ஆச்சர்யம் தாங்க முடியாது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை காமெடி இயல்பாக வரணும். அதை ரசித்துக்கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட ஹீரோக்கள் லிஸ்ட்டில் நிச்சயம் விமல் சேர்ந்திடுவார். இந்த மாதிரி ரோலுக்கு விமலைத்தவிர வேறு ஆளில்லை. விமலும், சிங்கம்புலியும் ஒண்ணுபோல எல்லா சீனிலும் வருவாங்க. ஒரு ஹீரோ காமெடி நடிகரோடு சரியாக சேர்ந்து நடிச்சால் நகைச்சுவை பின்னி எடுக்கும். சத்யராஜ் - கவுண்டமணி மாதிரி விமல் - சிங்கம்புலியும் பேசப்படுவார்கள். எந்த ஈகோவும் தலை காட்டாமல் இரண்டு பேரும் காமெடியாக நடிச்சுக்கொடுத்தார்கள்.
ஆனந்தராஜ் இடைவேளைக்குப் பின்னாடி இன்னொரு ஹீரோ மாதிரியே வருவார். அவருக்கு பரங்கிமலை ஜோதி மாதிரி தியேட்டர்களில் படம் பார்க்கப் பிடிக்கும். விஷுவலைவிட சப்தங்களை ரசிக்கிற ஆளு. அவரோட காமெடி கூட அள்ளும். நாயகிகள் நிறைய பேர் இருக்காங்க...
ஆஷ்னா ஜாவேரி, பூர்ணா, மியா ராய்னு மூன்று பேர். பூர்ணா இன்ஸ்பெக்டரா வருவாங்க. படத்தில் அவங்களுக்கான நல்ல இடங்கள் இருக்கு. மியா ராயும், ஆஷ்னாவும் நல்லா புரிஞ்சுக்கிட்டாங்க. நம்ம கிளாமர் படத்திற்குத் தேவைன்னு தெரிஞ்சுக்கிட்டு நடிச்சுக் கொடுத்தாங்க. இளைஞர்களுக்கு இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும். கிளாமர் இருக்கிற அதே நேரம் காமெடியும் கலகலக்கும்.
இந்தப் படத்தை தயாரிச்சது சர்மிளா மாண்ரே. அவரை பத்து வருஷங்களுக்கு முன்னாடி கன்னட சினிமாவில் அறிமுகப்படுத்தினேன். அவர் அங்கே 30 படங்களுக்கு மேல் பண்ணிட்டார். அந்த சமயம் ‘எனக்கு ஒரு படம் தயாரிக்கணும்னு ஆசை. அப்படி தயாரிக்கும் பட்சத்தில் நீங்கதான் டைரக்டர்...’னு சொன்னார். நான் சிரிச்சிட்டு கடந்து போயிட்டேன்.
இத்தனை வருசம் கழிச்சு சொன்னபடிக்கு என்னைத்தேடி கண்டுபிடித்து ‘படம் பண்ணிக்கொடுங்க...’னு அட்வான்ஸ் கொடுத்தார். எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. அப்புறம் சடசடன்னு இறங்கி தயாரிச்சதுதான் இந்தப் படம். லண்டனில் இரண்டு பாடல்களோடு, காட்சிகளும் எடுத்திருக்கோம்.
25 நடன மங்கைகளோடு பாடல் காட்சிகளும் இருக்கு. அங்கே இருக்கிற டாப் போர்ன் ஸ்டார் மியா ராய் கன்பைட் காஞ்சனா என்ற ரோலில் நடிக்கிறாங்க. டைரக்டர் விஜய், எமி ஜாக்ஸனை இங்கே கொண்டு வந்த மாதிரி நாங்க மியா ராயை இறக்கியிருக்கோம். கவர்ச்சி என்பதற்கு மேல் போகாமல் நீங்க ரசிக்கிற மாதிரியிருக்கும். இதில் நகைச்சுவையும் பிரதானம்தான். பாடல்கள் அருமையா இருக்கு...‘மூடர் கூடம்’, ‘கப்பல்’ மாதிரியான ஹிட் படங்களில் இசை அமைத்த நடராஜன் சங்கரன்தான் மியூசிக். ‘மூடர்கூடம்’ நவீன் படங்களுக்கு இவர்தான் ஆஸ்தான இசையமைப்பாளர். கோபி ஜெகதீஸ்வரன்தான் கேமராமேன். என்னுடைய கனவைப்புரிந்துகொண்டு, அதை இறுதியாக்கித் தருவதில் அவருக்கு இணை அவரே.
படத்தில் எக்கச்சக்க கிளாமர் இருந்து விடுமோ என்ற கவலையெல்லாம் வேண்டாம். படத்தில் காமெடியும், கிளாமரும் கலந்துதான் வரும். இந்தப் படத்தைப் பத்தி சொல்லணும்னா இன்னொரு வெற்றி.
முழுக்கவே அந்த மூட்லதான் தினமும் ஸ்பாட்டுக்குப் போறேன். ஒரு ஜாலி என்டர்டெயின்மென்ட் படத்திற்கான கேரண்டியை எங்களால் தரமுடியும் என்பதுதான் இந்தப்படத்தோட நம்பிக்கைச் செய்தி.எந்த கவலையிருந்தாலும், மறந்திட்டு சிரிச்சிட்டு, கவலைகளைத் தூக்கிப் போட்டுட்டு போங்க.l
நா.கதிர்வேலன்
|