அரசியல் யார்க்கர்!
ரீடர்ஸ் வாய்ஸ்
 யோகா, செல்ஃபீ, ஆக்ரோஷம் என அனைத்து விஷயங்களையும் கிளாமர் குயின்களை வைத்து விளக்கியது சூப்பர்! - த.சத்தியநாராயணன், அயன்புரம்; லட்சுமிநாராயணன், வடலூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஜனனி கார்த்திகா, திருவண்ணாமலை; நஞ்சையன், பொள்ளாச்சி.
வடசென்னையில் தூள் நடிப்பில் மிரட்டிய சரணின் நடிப்புத்திறமை அவருக்கு அசுரபலம். - பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்; சத்தியநாராயணன், அயன்புரம்.
‘ஏரியா லிட்ரேச்ச’ரில் ‘அல்வா பொட்டலம் மணக்குது...’ லந்து கானாவை வாசித்து சிரித்து வயிறே புண்ணானது. - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; முருகேசன், கங்களாஞ்சேரி; ராமகண்ணன், திருநெல்வேலி.
‘பகவான்’ பற்றிய உண்மைகளை பேசும் தொடராக வெளியான முதல் அத்தியாயமே பரபரப்பை பற்றவைத்துவிட்டது. - த.சத்தியநாராயணன், அயன்புரம்; லட்சுமி நாராயணன், வடலூர்.
மக்கள் முடிவெடுத்தால் சின்னம் முக்கியமில்லை என உண்மையை உடைத்து பேசிய ஆர்.எஸ்.பாரதி பேட்டி, அரசியல் யார்க்கராய் மிரட்டியது. - டி.முருகேசன், கங்களாஞ்சேரி; சங்கீதசரவணன், மயிலாடுதுறை.
பதினைந்து ஆண்டுகளாக கிளாமர் குறையாத ஏஞ்சல் காஜலின் ஸ்டில்களும், அட்டைப்படமும் கும்மென மூட் ஏற்றின. - ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
வெற்றித்தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் பேட்டியும் அவர் அனுபவங்களும் வெகு எதார்த்தம். - அக்ஷயா மாறன், திருவண்ணாமலை; சண்முகராஜ், திருவொற்றியூர்.
பாரம்பரிய மருத்துவங்களின் பெயரில் போலி மருத்துவத்தில் காசு பார்க்கும் அசுரர்களைப் பற்றிய உண்மைகளை புட்டு வைத்த ‘சித்து விளையாட்டு’ தொடருக்கு நன்றி. - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
தாலாட்டுக்கென ஆல்பம் தயாரித்த வெங்கட்ராமன் கஸ்தூரி தம்பதியினரை தாராளமாக பாராட்டலாம். - லட்சுமி நாராயணன், வடலூர்.
தமிழின வெறுப்பாளரான ராஜபக்ஷேவை கொல்லைப்புற வழியாக பிரதமராக்கியுள்ள அதிபர் சிறிசேனா, ஜனநாயகத்திற்கு பேரபாயத்தை உருவாக்கியுள்ளார். - மனோகா, திருச்சி; வளையாபதி, தோட்டக்குறிச்சி.
நகரங்களில் ஆண்கள் வீட்டுவேலைகள் செய்வது புதிது என்றாலும் கிராமங்களில் இது வழக்கத்திலுள்ளது தான். - ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.
லூயிஸ் ஹாமில்டன் இனவெறுப்புகளை சமாளித்து F1 பந்தயத்தில் சூப்பர்ஸ்டாராக மாறியது அசாதாரணம்தான். - டி.முருகேசன், கங்களாஞ்சேரி.
|