அஞ்சு பன்ச் - விஜய்
 *ஸ்பாட்டில் கேலி, கிண்டல், அரட்டை எதுவும் கிடையாது. ஆனால், எல்லோரையும் கவனித்துக்கொண்டே இருப்பார். *விருதுகளில் கவனம் செலுத்த மாட்டார். ஆனால், ‘மாஸ் ஹீரோ’ என்பதற்கு எந்த பங்கமும் இல்லாமல் பார்த்துக்கொள்வார்.
*படங்களில் அவரின் குழந்தைகள் அவ்வப்போது தலைகாட்டினாலும், சினிமா சாயல் இல்லாமல்தான் வளர்க்கிறார்.
*நகைகளின் மீது ஈர்ப்பில்லை. முன்பு ஒரு நெளி மோதிரம் விரலில் மிளிரும். இப்போது அதுவும் இல்லை. சிலுவை கொண்ட ப்ரேஸ்லெட்டை மட்டும் கையில் அணிந்திருக்கிறார்.
*வீட்டிலிருந்தால் பாடிக்கொண்டேதான் உலாவுவார். எல்லா ஹீரோக்களின் பாடல்களும் அதிலிருக்கும்.
நன்மதி
|