கவிதை வனம்
 சந்தோஷத்தின் நினைவுகள் சந்தோசத்திற்கான நிமிடங்கள் பெரும்பாலும் நகலெடுக்கமுடியாதவை ஒரு எண் கணிதக் குறிப்பைப் போன்று ஒரு செயல்முறை அறிவியலைப் போன்று எளிதாகத் திருத்தியமைக்க லாயக்கற்றவை பிடில் ஒலியை பிடிலுக்குள் தேடுகிறவனைக் கோமாளி என்கிறான் புல்லாங்குழல் வாசிப்பவன் உலகம் சுருங்குகிறது விரிகிறது மீண்டும் சந்தோசம் அதே எதிர்பாராத நிமிடப் புள்ளிகளில்தான் பூக்கிறது ஒரு பொக்கைவாய் குழந்தையின் சிரிப்பைப்போல - பிறைநிலா
வளர்ச்சி
பச்சையமிழந்த சருகுகளில் துளிர்ப்பாயிருந்தது மரத்தின் வளர்ச்சி - அ.கு.ரமேஷ்
|