முதலை நேசன்!



ஆற்றில் இருக்கும் முதலைகளை விசில் மூலம் அழைக்கமுடியுமா?

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்கார் விசில் மூலமே முதலைகளை தொடர்பு கொண்டு பிரமிக்க வைக்கிறார்!  கோழிப்பண்ணை வைத்துள்ள ராம்சந்தர் சரத்கார், விசிலடித்தாலே திரகோல் ஆற்றிலிருந்து 25க்கும் மேற்பட்ட முதலைகள் அவரைத் தேடி கரைக்கு மின்னலென வருகின்றன.

என்ன காரணம்?

புதனும், சனியும் முதலைகளுக்கு ராம்சந்தர் அளிக்கும் கோழிகள்தான் தீனி! மீன்பிடிக்கச் செல்லும் கிராமத்தினர் யாரையும் முதலைகள் இதுவரை தாக்கியதில்லையாம். “முதலைகளை எளிதில் பழக்கப்படுத்த முடியும். ராம்சந்தரின் விசிலைப் புரிந்து கொள்வதும் அப்படித்தான்...” என்கிறார் உயிரியலாளரான சோகம் முகர்ஜி.

மும்பை, கோவா, தில்லியிருந்து சுற்றுலாப் பயணிகள் முதலைகளைப் பார்க்க வருவதால் ஆற்றுப்படுகையை ‘மகர் தர்ஷன்’ என்னும் முதலைகளை காணுமிடமாக வனத்துறை மாற்றவிருப்பதாக தகவல்.                          

ரோனி