ஹீரோயின்ஸ் சம்மர் வெகேஷன்!* எல்லா சம்மருமே ராய் லட்சுமிக்கு ஸ்பெஷல்தான். ஏனெனில் அவரது பிறந்தநாள் மே மாதத்தில்தான் வருகிறது. ஸோ, ஏப்ரலிலேயே  வெகேஷனுக்கு ரெடியாகிவிடுவார் ராய். அந்தவகையில் இந்த பர்த் டேவை லண்டன் கேம்டன்டவுனில் கொண்டாடியிருக்கிறார்!

* சந்தோஷத்தில் பூரிக்கிறார் காஜல் அகர்வால். அவரது தங்கை நிஷா அகர்வால் இந்த சம்மர் ஹாலிடேக்கு தன் ஃபேமிலி யோடு மும்பை வந்ததே  பூரிப்பின் ரகசியம். நிஷாவின் குழந்தை இஷானுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்த காஜல் அவனைத் தூக்கிக் கொண்டு அருகில் உள்ள கோயிலுக்குச்  சென்று பிரார்த்தனை செய்திருக்கிறார்!

* தன் ஹோம் டவுன் லண்டனில்தான் சம்மரை கொண்டாடியிருக்கிறார் எமி ஜாக்சன். இடையே சில நாட்கள் ரிலாக்ஸ் ட்ரிப்பாக கிரீஸ் நாட்டுக்குச்  சென்று ரெஃப்ரெஷ் ஆகியிருக்கிறார். அங்கே கடற்கரையில் பிகினி காஸ்ட்யூமில், தான் உலாவியதை இன்ஸ்டாவில் பதிவிட்டு ஹா(ர்)ட் பீட்டை எகிற  வைத்திருக்கிறார்!

* ‘ஜூங்கா’ படப்பிடிப்பை முடித்துவிட்டு அபுதாபி பறந்த மடோனோ செபஸ்டியன், தன் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸுடன் தியேட்டர், ஷாப்பிங் என சம்மரை  கொண்டாடியிருக்கிறார்.

* தெலுங்கில் சிரஞ்சீவியின் பட ஷூட்டிங். கூடவே ‘நா நுவ்வே’ பட ரிலீஸ் புரொமோஷன். ஆக டூ இன் ஒன் என திட்டமிட்டு ஹைதராபாத்தில்  முகாமிட்டுள்ளார் தமன்னா. மும்பையில் ஐபிஎல் மேட்ச்சை நேரில் சென்று கண்டுகளித்ததுதான் இந்த சம்மர் ஸ்பெஷல் என கண் சிமிட்டுகிறார்  தம்ஸ்.

* ‘மீண்டும் ஒரு காதல் கதை’ இஷா தல்வார், ஆலப்புழா படகு வீட்டில் தங்கியபடி கோடையை எதிர்கொண்டு ‘கடலில் மிதந்தபடி முழு நிலவைப்  பார்த்து ரசிப்பதே தனி சுகம்...’ என கவிதை எழுதியிருக்கிறார்!

* ட்ராவல் குயினான ‘லிங்கா’ சோனாக்‌ஷி சின்ஹா, இந்தக் கோடையில் மலேஷியாவில் இன்ச் பை இன்ச்சாக சுற்றியிருக்கிறார்.
மெலகா நதியில்   படகில் பயணித்ததை ‘‘லவ்லி மொமன்ட்’’ என சிலிர்க்கிறார்.

* சம்மருக்கு முன்பே அமெரிக்கா பறந்து வந்துவிட்டார் த்ரிஷா. அங்கே அட்வான்ஸாகவே தன் பர்த்டே செலிபிரேஷனை வெளிநாட்டு நட்பு  வட்டங்களுடன் கொண்டாடிவிட்டார்.

* கேன்ஸ் ஃபெஸ்டிவலுக்காக பிரான்ஸ் சென்ற தீபிகா படுகோனே, அந்த விழாவைச் சிறப்பித்துவிட்டு, அடுத்த வேலையாக அங்குள்ள நகரங்களுக்கு  போட்டோ ஷூட் ட்ரிப் அடித்திருக்கிறார். இதனை முடித்த கையோடு லண்டன் பறந்துவிட்டார். ம்... பறக்கும் பறவை!

* பங்களாதேஷ் நாட்டுக்கு விசிட் அடித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. யூனிசெஃப் சார்பில் அங்குள்ள அகதிகள் முகாமுக்குச் சென்று அவர்
களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்ந்திருக்கிறார்.

* சென்ற ஏப்ரலில் ஷார்ஜாவில் டான்ஸ் ஷோவுக்காக சென்று வந்த நிக்கி கல்ரானி, இந்த மே மாதம் மலையாளப் பட ஷூட்டை சாக்காக வைத்து  கேரளாவை ரவுண்ட் அடித்திருக்கிறார்!

* ஸ்பெயின் நாட்டுக்கு ஹாலிடே ட்ரிப்பாக சென்றிருந்தார் டாப்ஸி. ‘‘பார்சிலோனா கண்டிப்பாக பார்க்க வேண்டிய நகரம். பீச், ஹோட்டல், குடிநீர் என  அங்கே எல்லாமும் பர்ஃபெக்ட்!’’ என டூர் டிப்ஸை அள்ளி
வீசுகிறார்.

* கேரள வீட்டில் தன் செல்ல நாய்க்குட்டிகளுடன் பொழுதைக் கழித்தார் அமலா பால். கூடவே விதவிதமான உணவு களைச் சமைக்கவும்  செய்திருக்கிறார். அந்த வகையில் இவர் இந்த சம்மரில் கற்றது மாம்பழம், வாழைப்பழம், டார்க் சாக்லேட் காம்பினேஷனில் தயாராகும் ஓட்ஸ்  டிஷ்ஷை!

* டோலிவுட் ஹீரோயின் லாவண்யா திரிபாதி (தமிழில் ‘மாயவனி’ல் நடித்தவர்), முதல் முறையாக நியூயார்க் சென்று வந்திருக்கிறார். அங்கே பை  நிறைய ஷாப்பிங் செய்ததில் பொண்ணு ஹேப்பி.

* தமிழில் ‘திருமணம் என்னும் நிக்கா’வில் நடித்த ஹெபா படேல், டோலிவுட்டில் பிசி. இந்த சம்மரை சமாளிக்க காஷ்மீர் பக்கமுள்ள குல்மாருக்கு  குடும்பத்தினருடன் சென்று வந்திருக்கிறார். ‘‘குல்மாரின் பனிப்பாறைகளில் வாக்கிங் சென்றபோது, மும்பை வெயிலில் முகத்தில் வியர்வை வடிய  ஓடிய ஞாபகம் நிழலாடியது...’’ என ஃபீலாகிறார் ஹெபா.

* ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ யாஷிகா ஆனந்த், தமிழில் அடுத்து நடித்து வரும் படத்தின் ஷூட்டிங்குக்காக குளுகுளு பிரதேசமான கேரளா  பறந்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் படு செக்ஸியான படங்கள் போட்டுத் தாக்கும் யாஷியின் கைவசம் படங்கள் குவிந்து வருகிறதாம்.

தொகுப்பு: மை.பாரதிராஜா