உலகம் சுற்றும் பொடிசுகளின் படகு!



ஆலி ஃபெர்குஸன், ஹாரி என்ற இரு ஸ்காட்லாந்து சிறுவர்கள் கடந்தாண்டு மே மாதம் தங்களது சிறு பொம்மைப் படகை கடலில் செலுத்தினர்.

அட்வென்ச்சர் என பெயரிடப்பட்டுள்ள இப்படகில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் மூலம் இதன் பயணத்தை இணையத்தின் வழியாகப் பார்க்க முடியும். போதாதா? சிறுவர்களின் பெற்றோர் இதற்காக ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கினர். விளைவு... டென்மார்க் வரை மூழ்காமல் சுற்றி வந்த இந்த பாலியஸ்டர் படகை பலரும் இணையத்தில் ஆச்சரியத்துடன் பின்தொடர்ந்தனர். இப்போது பஹாமா அருகில் அட்வென்ச்சரின் பயணம் சிக்னல் கிடைக்காமல் முடிவுக்கு வந்துள்ளது.

ரோனி