தில்!



ரீடர்ஸ் வாய்ஸ்

இந்திய தேவதைகளை வரையும் கங்காரு தேச ஓவியர் கிரெக் ஃபெர்னாண்டஸின் கைவண்ணம் அசத்தல்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; நரசிம்மராஜ், மதுரை; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

மெய்நிகர் உலகில் பாதுகாப்பாக வாழ்வதற்கு வழி சொன்ன உங்களுக்கு பொன் வாள் பார்சல்!
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; முருகேசன், கங்களாஞ்சேரி; சங்கீத சரவணன், மயிலாடுதுறை; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

குனிந்த தலை நிமிராமல் ஸ்மார்ட்போன் பார்த்து நடக்கும் சிட்டிசன்கள் அனைவரும் மேட்சிங்காக வைஃபை குடை விரித்தால் தாங்குமா பூமி?
- சோழாபுகழேந்தி, கரியமாணிக்கம்; பூதலிங்கம், நாகர்கோவில்; சிவக்குமார், திருச்சி; வளையாபதி, தோட்டக்குறிச்சி; த.சத்தியநாராயணன், அயன்புரம்.

மன்னர்மன்னனின் ஹோம் அக்ரி தொடர், விவசாயப் புரட்சிக்கான விதை.
- ப.இசக்கிபாண்டியன், சென்னை; மனோகர், கோவை; பூதலிங்கம், நாகர்கோவில்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

‘மெட்டி ஒலி’ திரைக்கதை ஆசிரியர் சி.யூ.முத்துச்செல்வனின் வாழ்வை சொன்ன பேட்டி நெகிழ்ச்சி.
- எஸ்.நவீன்சுந்தர், திருச்சி.

மணியக்காரர் சத்திரத்தின் தொன்மையுடன் வரலாற்றையும் அறிந்து மகிழ்ந்தோம்.
- தா.சைமன்தேவா, சென்னை; ராமகண்ணன், திருநெல்வேலி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

கோ-வொர்க்கிங் ஆபீஸ் கான்செப்ட் சூப்பர் ஐடியா.
- எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; மயிலைகோபி, அசோக்நகர்; மாணிக்கவாசகம், கும்பகோணம்; கைவல்லியம், மானகிரி.

தண்ணீர் லாரி டிரைவர்களின் இரவு வாழ்க்கையை நேரடி சாட்சியாக பதிவு செய்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ தொடர் எதார்த்தத்தின் வெம்மை.
- டி.நரசிம்மராஜ், மதுரை.

போலீசுக்கும் பொதுமக்களுக்குமான நல்லுறவு ஐடியாக்கள் செம கலகல!
- செல்வராஜ், விழுப்புரம்.

நாணயங்கள், கரன்சிகளை தேடிப்பிடித்து சேகரிக்கும் யோகா ட்ரெய்னர் விஜயகுமாரின் ஹாபி, நாட்டிற்கே பெருமை.
- தா.சைமன்தேவா, விநாயகபுரம்.

தர்மபுரி வள்ளி ஆயாவின் கைமணத்தில் கோழிக்குழம்பு, வறுவல் ரெசிபி களோடு வெற்றி சீக்ரெட்களையும் சொன்ன ‘லன்ச் மேப்’ நல்லுணவு வழிகாட்டி!
- மனோகர், கோவை; முருகேசன், கங்களாஞ்சேரி; மகிழை சிவகார்த்தி, சென்னை.

போதை பேரரசன் பாப்லோவின் சொகுசு வாழ்க்கையின் பின்னே இருந்த வலியும் வேதனையும் உணர்த்தும் ‘காட்ஃபாதர்’ விறுவிறு வேகம்.
- பூதலிங்கம், நாகர்கோவில்.

கருத்துப்படங்களுக்கு எதிரானதுதான் சினிமா என்று போல்டாகப் பேசிய யூகிசேதுவின் ‘தில்’லை மெச்சலாம்.
- கொ.சி.சேகர், பெங்களூரு; பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்; மூர்த்தி, பெங்களூரு; மகிழை சிவகார்த்தி, சென்னை; நாகராஜன், திருச்சி; முருகேசன், கங்களாஞ்சேரி.