பணத்தை திருப்பிக்கொடுங்க!



ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறோம், டிக்கெட் பதிவு செய்கிறோம். இதில் பிரச்னையாகும்போது பணத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் நிறுவனம் திருப்பி அளிப்பது நடைமுறை.

ஆனால், ராஜஸ்தான் வாலிபர் தன் பணத்தைத் திரும்ப பெற ஓராண்டாக அலைந்து வருகிறார். இத்தனைக்கும் அவருக்கு வர வேண்டிய தொகை வெறும் ரூ.35தான். கடந்தாண்டு ராஜஸ்தான் நகரான கோட்டாவிலிருந்து தில்லி செல்ல ரயிலில் பதிவு செய்திருந்தார் சுஜித் ஸ்வாமி. எதிர்பாராதவிதமாக பயணத்தை ரத்து செய்ய வேண்டி வந்தது.

அப்போது டிக்கெட் விலையான ரூ.765ல், ரூ.665 திரும்பக் கிடைத்துவிட்டது. ரத்து செய்வதற்கான தொகையாக ரூ.65க்கு பதில் நூறு ரூபாயை பிடித்துக்கொண்டனர். ஏன் என தகவலறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் கேட்டால், ஜிஎஸ்டி என காரணம் சொல்லி பணம் தர ஓராண்டாக மறுத்துவருகிறது ரயில்வே நிர்வாகம். இப்போது லோக் அதாலத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ரயில்வே மேலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  
 

ரோனி