சிக்ஸர்!
ரீடர்ஸ் வாய்ஸ்
இந்தியன் சூப்பர்லீக்கில் வென்ற சென்னை எஃப்சி, டி20 கோப்பையில் இந்தியா வெற்றி இரண்டையும் கொண்டாடியது சிக்ஸர் குதூகலம். - த.சத்தியநாராயணன், அயன்புரம்; மனோகர், கோவை; நவீன்சுந்தர், திருச்சி.
88 ஆண்டுகளாக கர்நாடக கச்சேரிகளை சேமித்து வரும் திருவல்லிக்கேணி நரசிம்மனின் முயற்சி பிரமிப்பு தந்தது. - மாணிக்கவாசகம், கும்பகோணம்.
 விவசாயிகளுக்கு மானியம் அளிப்பது உயிர்கொடுப்பது போன்றதே என்ற பேராசிரியரின் கருத்தை அரசு யோசிப்பது அவசியம். - கைவல்லியம், மானகிரி; மாணிக்கவாசகம், கும்பகோணம்; பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.
சென்னையிலும் மல்லிகை வாசம் கவுல் பஜாரிலிருந்து வருவது அறியாத புதுச் செய்தி. - ஜானகி ரங்கநாதன், சென்னை; தேவா, கதிர்வேடு; மயிலைகோபி, அசோக்நகர்; சோழா புகழேந்தி, கரியமாணிக்கம்; முருகேசன், கங்களாஞ்சேரி; பூதலிங்கம், நாகர்கோயில்.
நாட்டுக்காக உயிரைத் தர இருமுறை யோசிக்காத டெசர்ட் ஸ்கார்பியன்ஸ் படை பற்றி வாசித்து மனம் நெகிழ்ந்து போனோம். - சைமன்தேவா, விநாயகபுரம்; மனோகர், கோவை; சித்ரா, திருவாரூர்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; பிரேமா பாபு, சென்னை.
ஈரோடு தமிழன்பனின் கவிதைகளை வாசிக்க கோடைமழை சுகம். - பஞ்சலிங்கம், மடத்துக்குளம்.
‘அரூப தோழமை’, ‘நீயும் நானும்’ ஆகிய தலைப்புகளில் வெளிவந்த கவிதைகள் அருமை. - சேவுகப்பெருமாள், பெருமகளூர்; மகிழை சிவகார்த்தி, புறத்தாக்குடி.
சம்மருக்கேற்ற ஃப்யூஷன் சேலை கட்டிய பெண்களைப் பார்த்து சொக்கிப்போனோம். - கைவல்லியம், மானகிரி; மகிழை சிவகார்த்தி, புறத்தாக்குடி; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஜெயச்சந்திரபாபு, சென்னை; மயிலைகோபி, அசோக்நகர்.
பூவா, தலையா ஐடியாக்கள் வயிறு குலுங்க சிரிக்க வைத்ததோடு இவை இனி தினசரி வாழ்க்கையிலும் அப்ளையாகும் பீதியையும் ஏற்படுத்தியது. - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
இளம் வயதிலேயே வைராக்கியத்துடன் தீக்ஷை எடுக்கும் ஜெயின்களின் வாழ்க்கையைச் சொன்ன புதிய தலைமுறை துறவிகள் செய்தி மனதுக்கு இதம். - மயிலை கோபி, அசோக்நகர்.
விறகில் சமைத்து பரிமாறும் டவுசர் கடை ராஜேந்திரன் ஹோட்டல் மெனு, பசித் தீயைத் தூண்டிவிட்டது. - முருகேசன், கங்களாஞ்சேரி; சைமன்தேவா, விநாயகபுரம்; மனோகர், கோவை; நவாப், திருச்சி; ராமகண்ணன், திருநெல்வேலி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.
விண்வெளித்துறையில் பல்வேறு சாதனை தியரிகளை உருவாக்கிய ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிய கட்டுரையில் அருமையான தகவல்கள் சொன்ன குங்குமத்திற்கு நன்றி - நவீன்சுந்தர், திருச்சி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; காந்தி லெனின், திருச்சி.
|