டிஜிட்டல் இந்தியாவின் மறுபக்கம்



மத்தியப்பிரதேசத்திலுள்ள பன்ச்சடா பழங்குடி பெண்களுக்கு வயிறு காயாமல் இருக்க உதவுவது பாலியல் தொழில்தான் என்பது நெஞ்சை சுடும் நிஜம்.

பன்ச்சடா பழங்குடிகளின் குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தாலே அதிர்ஷ்டசாலிகள் என பிற உறவுகள் அக்குடும்பத்தை கொண்டாடுகின்றனர். 12  வயதில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர்கள் வேறு யாரோ அல்ல. உடன் பிறந்த சகோதரர்களும் பெற்ற தந்தையும்தான். மூன்று  மாவட்டங்களிலுள்ள 75 கிராமங்களில் தோராயமாக 23 ஆயிரம் பன்ச்சடா பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இதில் பெண்களின் எண்ணிக்கை 65%.  தலைப்பை மீண்டும் படியுங்கள்...

-ரோனி