சர்ச்சை காலண்டர்!
அலிகாரிலுள்ள இந்து மகாசபை வெளியிட்டுள்ள காலண்டரில் சர்ச்சைகள் கொட்டிக்கிடக்கின்றன என்கிறார்கள்.
 இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்காவை, மாசெஸ்வர் மகாதேவ் கோயில் என்றும்; ஷாஜகான் தன் மனைவிக்கு கட்டிய காதல் சின்னத்தை தேஜோ மகாலய கோயில் என்றும் தம் காலண்டரில் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். இதுபோலவே குதுப்மினார், அயோத்தியிலுள்ள பாபர் மசூதி, காசியிலுள்ள கியான் வியாபி மசூதி உள்ளிட்டவற்றையும் இந்து கோயில்களாக அடையாளம் காட்டியுள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
இப்பெயர்கள் அலிகாரிலுள்ள வர்ஷினி கல்லூரி வரலாற்று ப் பேராசிரியர் பிபி சக்சேனாவின் வழிகாட்டுதலில் சூட்டப்பட்டது என்று கூறிய இந்து மகாசபை செயலாளர் பூஜாசகுன் பாண்டே, ‘‘மேற்சொன்ன இடங்களை முஸ்லீம்களிடமிருந்து திரும்பப் பெற்று இந்துப்பெயர்களை சூட்டுவோம்...’’ என அசராமல் பேசுகிறார்.
-ரோனி
|