இங்கிலீஷ் பேசியதால் சிறை!
பீகாரில் காகரியா மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக்குமார், பனிரெண்டாம் வகுப்பு மாணவர். லீவில் தன் மாமாவைச் சந்திக்க சென்றிருக்கிறார்.
 வண்டி திருட்டு தொடர்பாக அபிஷேக்கின் மாமாவை போலீஸ் என்கொயரி செய்தபோது, எதற்காக கைது செய்திருக்கிறீர்கள்? என ஆங்கிலத்தில் கேள்வி கேட்டதுதான் அபிஷேக்கின் குற்றம். உடனே அவர் கொடுத்த டாகுமெண்ட்ஸைக் கூட சரிபார்க்காமல் இருநாட்கள் லாக்அப்பில் வைத்து அடி பின்னியுள்ளனர். பைக் திருட்டு வழக்கை அபிஷேக் மீது பதிவு செய்து பெயில் வழங்கிய போலீசாரின் மீது அபிஷேக் புகார் செய்தபின்தான் இவ்விவகாரம் சூடுபிடித்தது. இப்போது முகேஷ் மற்றும் சியாம் சுந்தர்சிங் என இரு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-ரோனி
|