உரிமையாளர் இல்லாமல் ரூ.11 ஆயிரம் கோடி!
பாரத வங்கியில் ரூ.1,262 கோடி; பஞ்சாப் வங்கியில் ரூ.1,250 கோடி மற்றும் பிற தேசிய வங்கிகளில் ரூ.7,040 கோடி; தனியார் வங்கி களில் ரூ.1,416 கோடி என கிட்டத்தட்ட ரூபாய் பதினோராயிரம் கோடி யாரும் உரிமை கோராமல் தேங்கியுள்ளது!
 ‘‘பல்வேறு கணக்குகளை வைத்துள்ளவர்களின் கணக்குகள் அல்லது இறந்துபோனவர்களின் கணக்கு, பினாமி வழியில் என சேர்ந்த தொகை இது...’’ என்கிறார் ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்தவரான சரண்சிங். வங்கிச்சட்டம் பிரிவு 26, 1949 படி, பத்தாண்டுகள் இயக்கப்படாத கணக்கு மூடப்பட வேண்டும் என்பது ஆர்பிஐ வங்கிகளுக்கு பரிந்துரைக்கும் விதி. விதி 26ஏ யின்படி உரிமை கோராத பணம் பத்தாண்டுகளுக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வு நிதிக்காக பயன்படுத்தப்படும் என ஆர்பிஐ தகவல் தெரிவிக்கிறது. ம்... என்னவோ போடா மாதவா..!
-ரோனி
|