கவிதை வனம்
நானானவன்
எங்கோ தூரத்தில் கேட்கும் சிட்டுக்குருவியின் கீச்சிடல் போலும் எங்கோ தூரத்தில் ஒலிக்கும் திரைப்பாடலின் மெல்லிசை போலும் எங்கோ எனக்குள்ளே ஒலித்துக்கொண்டே இருக்கிறாய் எனக்குள் நானாய் நீயே உயிர்த்திருக்கிறாய்.
- வித்யாசாகர்
 புன்னைகைப்பூ
நள்ளிரவில் ஒரு துயரக் கனவு போல் வந்து உன் கதவு தட்டும் நீ கவனியாது விட்ட என் புன்னகை ஒன்று மெல்லிய வாட்டத்துடன் தன்னை வெளிப்படுத்தும் அதுதான் மறுநாள் காலையில் உன் தோட்டத்தில் ஒரு பூவாகியிருக்கும் சூடிக்கொள் அதையேனும்.
- கா.கண்ணன்
|