அன்னமிடும் மசூதி!
தினசரி மும்பை கிராண்ட் சாலையிலுள்ள சன்னி பிலால் மசூதியில் இரவு நேர தொழுகை நிறைவடைந்தவுடன், இஸ்லாமியர்கள் தோராயமாக நூறுபேருக்கு உணவு வழங்குகின்றனர்.
 இரண்டு ரொட்டி, சப்ஜி என கொண்ட உணவு பாக்கெட்டுகளை வழங்குவதற்கான நிதியை சன்னி முஸ்லீம் சோட்டா கப்ரஸ்தான் அறக்கட்டளை வழங்குகிறது. மொய்ன் மியான் எனும் ஆன்மிகத்தலைவரின் வழிகாட்டுதலில் இந்த அன்னதான நிகழ்வு நடைபெறுகிறது. லங்கார் - இ - ரசூல் என இதனை அழைக்கிறார்கள். ‘‘ஏழைகளுக்கு சத்தான உணவை வழங்குவதோடு அவர்கள் பட்டினியில் வாடாமல் இருக்கவும் இந்த உணவுத்திட்டம் உதவும்...’’ என்கிறார் சமூக ஆர்வலரான சதாப் படேல்.
-ரோனி
|