ஜஸ்ட் பாஸ் சல்மான்!ஆதார் கார்டு, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில்  காஜல், ரஜினி சிரிப்பது இந்தியாவில் சாதாரணமாகிவிட்டது. ஆனால், காலேஜில் தரும் மார்க்‌ஷீட்டில் அப்படி குளறுபடி நடந்தால்..?

அப்படித்தான் அலிகாரிலுள்ள அம்ரத்தா சிங் நினைவு கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்தமாணவர் ஒருவரின் மார்க்‌ஷீட்டில் சின்ன குளறுபடி. மாணவரின் போட்டோ மிஸ்ஸாகி கெத்தான சல்மான்கான் படத்துடன் பாஸ்மார்க் 35% என வெளியாகியிருக்கிறது!  

‘‘மதிப்பெண்ணை பிரிண்ட் செய்ய அவுட்சோர்ஸ் செய்வதுதான் இந்த தவறுக்கு காரணம். இதற்கு முன்பு ராகுல்காந்தி படம், அம்பேத்கர் பெயரும் இடம்பெற்றிருக்கிறது...’’ என்கிறார்கள் பல்கலை வட்டாரத்தினர். ஆக்ரா பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் 7.2 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு மட்டும் தேர்வு எழுதியுள்ளனர். ஷாரூக்கானுக்கும் சான்ஸ் கொடுங்க ப்ரோ!                    

தொகுப்பு: ரோனி