சகோதரரின் சதி!பொடுசுகளாக இருக்கும்போது அண்ணன், தம்பி பாசம் பொங்கினாலும், வளர்ந்த பின் அனைத்தும் ஆடிட்டர் கணக்கு விவகாரம் போல இடியாப்ப சிக்கலாகி டென்ஷன், பழிக்குப்பழி என ரூட் மாறிவிடுவது உலக வழக்கம்.

பெய்ரூட்டில் தந்தையின் சொத்தாகக் கிடைத்த 120 ச.மீ. இடத்தில் சகோதரர்களில் ஒருவர் பீச்சை பார்க்குமாறு கிராண்டாக வீடு கட்டினார். இது இன்னொரு பிரதருக்கு எப்படி பிடிக்கும்? உடனே அவர் தன் சகோதரர் பீச்சை பார்க்க முடியாதபடி சிம்பிளாக லைட் திக்னெஸில் சுவரை எழுப்பி கறாராக பழிவாங்கியிருக்கிறார்.

அத்துடன் இந்த பில்டிங்கிற்கு அல்பாஸா என்றும் பெயர் சூட்டியிருக்கிறார். லெபனானில் நடந்த உள்நாட்டுப்போரில் இதுபோல டிசைனில் அமைந்த குயின்ஷிப் எனும் கட்டடம் குறித்த விவாதத்தின்போது பெய்ரூட் கட்டிட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து வைரலாகியுள்ளது.                  

ரோனி