தமிழ்ல படம் இயக்கணும்னு எல்லா மலையாள டைரக்டர்ஸும் நினைக்கறாங்க!‘‘பொய் சொல்லலை பாஸ்.
தென்னிந்திய
ரசிகர்கள்லயே தமிழ் ஆடியன்ஸ்தான் ரசனையானவங்க. வித்தியாசமான எந்த ஜானரை நாம
சுவாரசியமா
சொன்னாலும் அதை
வரவேற்பாங்க.
அதனாலயே கேரள இயக்குநர்
களுக்கு எப்படியாவது இங்க படம்
பண்ணணும்னு கனவு இருக்கு.
எனக்கும் அப்படி இருந்தது. இப்ப
அது நனவாகியிருக்கு...’’

ரசனையும் உற்சாகமுமாக பேசுகிறார் இயக்குநர் ராஜ்பாபு. மலையாளத்தில் திலீப் நடித்த ‘செஸ்’, ‘கலர்ஸ்’; பிருத்விராஜ் நடித்த ‘கங்காரு’ உட்பட பல வெற்றிப் படங்களை அங்கு இயக்கியவர், இப்போது நகுல், பிரகாஷ்ராஜ் நடிக்கும் ‘செய்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.

‘‘மலையாளத்துல இயக்குநரா மாறுவதற்கு முன்னாடி பல ஹிட் படங்களுக்கு செகண்ட் யூனிட் டைரக்டரா ஒர்க் பண்ணியிருக்கேன். அப்ப மனோரமா ஆச்சி, விக்ரம், ஆஷிஷ் வித்யார்த்தினு நிறைய பேரோட அறிமுகம் கிடைச்சது. அவங்ககிட்ட தமிழ் இண்டஸ்ட்ரி பத்திதான் பேசுவேன். அவங்களும் தங்களோட அனுபவத்தை பகிர்ந்துப்பாங்க. ஸோ, தமிழ் ஆடியன்ஸ் பத்தி ஓரளவு தெரியும்.

அந்த அடிப்படைலதான் ஒரு ஃபேமிலி என்டர்டெயினரா ‘செய்’ படத்தை உருவாக்கியிருக்கேன். இதுவரை யாரும் சொல்லாத கதை, தொடாத ஏரியானு பொய் சொல்ல விரும்பல. பட், எல்லோரும் ரசிக்கிற மாதிரி உருவாக்கியிருக்கோம். டப்பிங் அப்பவே பலரும் இதே கருத்தைத்தான் சொன்னாங்க.

ஹீரோவுக்கு ஒரு போன் கால் வரும். அந்த கால் வந்தது முதல் அடுத்த நாள் காலை வரை நடக்கும் சம்பவங்கள்தான் படம். த்ரில்லர் லைன் மாதிரி இருந்தாலும், படம் கலகலப்பா இருக்கும்...’’ புன்னகைக்கிறார் ராஜ்பாபு.டைட்டில் சிம்பிளா இருக்கே?

யெஸ். டைட்டில் சிம்பிளா அதேநேரம் கதையோட கனெக்ட் ஆகற மாதிரி இருக்கணும்னு யோசிச்சோம். ‘செய்’ பொருத்தமா அமைஞ்சது. படத்துல நகுல், பிரகாஷ்ராஜ், நாசர், தலைவாசல் விஜய்னு நிறைய நட்சத்திரங்கள் இருக்காங்க. ஹீரோயினா மும்பை பொண்ணு ஆஞ்சல் முன்ஜல். பாலிவுட்ல அமிதாப், சன்னி தியோல், கஜோலுடன் இவங்க நடிச்சிருக்காங்க.

வேலைக்கு போகாம ஹீரோ கனவுல நகுல் மிதக்கறார். அப்ப ஒரு விஷயத்தை செஞ்சு முடிக்கச் சொல்லி அவரோட அப்பா சொல்றார். அது என்ன விஷயம், எதுக்காக அவரை அதைப் பண்ணச் சொல்றார்..? இதையெல்லாம் சுவாரஸ்யமா சொல்லியிருக்கோம். ‘சிகரம் தொடு’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படங்களோட கேமராமேன் விஜய் உலகநாத், ஒளிப்பதிவு பண்றார். நினைச்ச விஷயங்களை அப்படியே ஸ்கிரீன்ல கொண்டு வந்திருக்கார் . நிறைய ஆல்பங்களுக்கு இசையமைச்ச நிக்ஸ் லோபஸ் இதுல இசையமைப்பாளரா அறிமுகமாகறார்.

நகுல் லுக் அசத்தலா இருக்கே..?

தேங்க்யூ. என் ஸ்கிரிப்ட் ரைட்டர் ராஜேஷ்ராமன் மூலமா நகுல் அறிமுகமானார். அவர்தான் நகுல்கிட்ட கதை சொல்ல கூட்டிட்டுப் போனார். ‘பாய்ஸ்’ல இருந்தே நகுலை கவனிச்சுட்டு வரேன். திறமையானவர். டான்ஸ் நல்லா தெரிஞ்சவர். நல்ல பர்ஃபாமர்.

‘செய்’ல அவரோட கேரக்டர் பெயர் சரவெடி சரவணன். முதல் முறையா காமெடி ட்ரை பண்ணியிருக்கார். கலர்ஃபுல்லா ஸ்டைலீஷான நகுலை இதுல பார்க்கலாம். பிரகாஷ்ராஜ், நாசர்னு சீனியர் ஆட்களோடு முதல் முறையா இந்தப் படத்துலதான் ஒர்க் பண்ணி யிருக்கார். ஸ்பாட்டுல கலகலனு சிரிப்பு சத்தம் கேட்டாலே அங்கே நாசரும், நகுலும் ஜாலியா அரட்டை அடிச்சிட்டு இருக்காங்கனு முடிவு பண்ணலாம்.

அச்சன்கோவில் பக்கமிருக்கிற காடுகள்ல ஒரு ஃபைட் சீக்குவென்ஸ் எடுத்தப்ப நகுல் லாரி ஓட்டினார். அப்ப அவர் சொன்ன விஷயத்தைக் கேட்டு ஆச்சர்யப்பட்டோம்.

‘சின்ன வயசுல இருந்தே ட்ரக், லாரினா ரொம்ப பிடிக்கும். அது ஏன்னு தெரியலை. முதன் முதலா பேச ஆரம்பிச்சப்ப அப்பா, அம்மானு சொல்றதுக்கு முன்னாடி ‘லாரி’னுதான் பேசினேன். ஆனா, ஒரு படத்துல கூட லாரி ஓட்டுற சந்தர்ப்பம் அமையல. இப்பதான் கிடைச்சிருக்கு’னு சொன்னார். பாகிஸ்தான் பாடகரை எப்படி பிடிச்சீங்க?

இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸோட செலக்‌ஷன். படத்துல ‘இறைவா...’னு ஒரு சூஃபி பாடல் இருக்கு. அதை பாடறதுக்காக பாகிஸ்தான் சிங்கர் ஆதிஃப் அலிகிட்ட கேட்டோம். இந்தியில் ராய்லட்சுமி நடிச்சிருக்கிற ‘ஜூலி2’க்கு அவர்தான் இசையமைப்பாளர். மறுப்பே சொல்லாம வந்து பாடினார். இந்துஸ்தானி பாடகர் சபதஸ்வராவும் அவரோடு இணைந்து பாடியிருக்கார்.

பாடல்களை யுகபாரதி, விவேக், மதன்கார்க்கி எழுதியிருக்காங்க. தயாரிப்பாளர்களான மன்னுவும் உமேஷும் பக்கபலமா இல்லைனா படத்தை முடிச்சிருக்க முடியாது. பாண்டிச்சேரி, தென்காசி, அச்சன்கோவில், சென்னைனு நிறைய இடங்கள்ல ஷூட் பண்ணியிருக்கோம்.கலகலப்பான விஷுவல் ட்ரீட்டுக்கு ரெடியா இருங்க!

மை.பாரதிராஜா