ஹானஸ்ட் திருடர்!பஞ்சாபின் அமிர்தசரஸைச் சேர்ந்தவர் பட்வீந்தர் சிங். அவர் தன் மனைவியை ஹால்கேட் அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது வண்டியை திடீரென வழிமறித்த மூன்று மாஸ்க் ஆசாமிகள், பல்வீந்தரை துப்பாக்கி முனையில் மிரட்டி, காரை லவட்டிச் சென்றுவிட்டனர். போகும் முன்பு காரை க்ளைம் செய்து வாங்க இன்சூரன்ஸ் மேட்டர்களை கவனமாகக் கொடுத்துவிட்டுச் சென்ற திருடர் டீமின் ‘நல்லெண்ணம்’ குறித்துதான் இப்போது பஞ்சாப் முழுக்க பேச்சாக இருக்கிறது.அனைத்து தொழிலிலும் ஹானஸ்ட் மனிதர்கள் இருப்பது இயல்புதானே?!