டூட்டி ஓவர்!உழைக்கிற மனிதர் என்றாலும் ரெஸ்ட் வேண்டாமா? ஜெய்ப்பூரிலும் அப்படித்தான் ஓய்வு எடுக்க நினைத்தார் ஒருவர். நிலைமை என்னாச்சு தெரியுமா?

ஏர் இந்தியாவின் ஜெய்ப்பூர் - டெல்லி ஃபிளைட் வானில் மேலேறும் என பயணிகள் ஜெய்ப்பூரில் காத்திருந்தனர். கடிகார முட்கள்தான் முன்னேறியதே தவிர விமானம் டேக் ஆஃப் ஆகவேயில்லை. என்னாச்சு என்று பதறிக்கேட்க, ‘‘என் டூட்டி ஓவர்!’’ என கூலாக பதில் சொல்லியிருக்கிறார் பைலட்.

அதிகாரிகள் எவ்வளவு போராடியும் விமானியை பைலட் சீட்டில் உட்கார வைக்க முடியாததால் 40 பயணிகள் அடுத்தநாள் ஃபிளைட்டிலும், சிலர் சாலை வழியாகவும் டெல்லி கிளம்பினார்கள். ஜெய்ப்பூர் வரும்போதே பைலட்டின் டூட்டி டைம் முடிந்துவிட்டதால், சட்டப்படி அவர்மீது எந்த ஆக் ஷனும் இல்லை என ஏர்இந்தியா கூறிவிட்டது.