ஸ்நாக்ஸ் கடத்தல்!ஃபேவரிட் படத்துக்கு புக் செய்து தியேட்டருக்குள் செல்லும்போது பசிக்குமே என ஸ்நாக்ஸ் சகிதம் சென்றால், அதை பிடுங்கிக் கொண்டுதான் அனுமதிப்பார்கள்.

இப்படி செக்யூரிட்டி கைப்பற்றாமல் இருக்கத்தான் ஏஞ்சலா பிரிஸ்க் புதிய பாதை போட்டுள்ளார். சிம்பிள் வழி. யெஸ். பிரக்னன்ட் ஆகிவிடுவதுதான் ஆஞ்சலா கண்டுபிடித்த வழி. ஸ்நாக்ஸை வயிற்றில் காம்பாக்ட்டாக வைத்து எப்படி கர்ப்பிணியாக மாறினேன் என ஏஞ்சலா பிரிஸ்க் படம் போட்டு பாகம் குறித்து இணையத்தில் சுடச்சுட பதிவேற்றியிருக்கிறார்.

‘குலம்காத்த மாகாளி...’ என பேனர் வைக்காத குறையாக அம்மணிக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்துகளைக் குவிக்கிறார்கள் இணைய கண்மணிகள். ஐடியா ஓகே. ஆனால், ஆண்களுக்கு? என சிலர் கிராஸ் என்கொயரி செய்துள்ளனர். அதுதானே... ஆண்கள் என்ன பாவம் செய்தார்கள்?!