மச்சம்
அரவிந்த்சாமியின் ஜோடி ஸ்‌ரேயாவா? மச்சமுள்ள மனுஷன்தான்!
- மணிமாறன், திருவண்ணாமலை; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டாராக பிக்கப் ஆகும் நிலையில் கதை திருட்டு பிரச்னையை கிளப்பு
கிறீர்களே! இது நியாயமா?
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

சிவராஜ் முத்துலிங்கத்தின் சைக்கிள் டீ ஐடியா, சூப்பர். அதிலும் ஸ்நாக்ஸ் வைக்கும் இடத்திற்கான சிந்தனைக்கு ஓ போடலாம்.
- பூதலிங்கம், நாகர்கோவில்; தேவா, கதிர்வேடு; சண்முகராஜ், சென்னை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; நவீனா தாமு, திருவள்ளூர்;
சீனிவாசன், எஸ்.வி.நகரம்; த.சத்தியநாராயணன், அயன்புரம்.

தக்‌ஷிணசித்ரா பற்றிய படங்களும், வர்ணனைகளும் பனிரெண்டு ரூபாயில் டூர் போன அட்டகாச திருப்தியைக் கொடுத்தது.
- வண்ணை கணேசன்,சென்னை;
சத்தியநாராயணன், சென்னை.

ஹைஹீல்ஸின் பிளஸ், மைனஸை விளக்கிய கட்டுரை ஆஹா!
- பூதலிங்கம், நாகர்கோவில்; கைவல்லியம், மானகிரி; சண்முகராஜ், சென்னை.

ஆங்கிலேயர் காலத்து ட்ராக்கை இன்றும் பயன்படுத்தும் இந்திய ரயில்வேயில் விபத்துகள் நடப்பது எப்படி குறையும்?
- சிவக்குமார், திருச்சி; ஜெ.சி, சென்னை; தேவா, கதிர்வேடு; பொ.கணேசன், மும்பை.

தேவதைகள்   இன்றுவில், அல்வாத்துண்டு அழகிகளை சுகமாக தரிசித்து வாய் பிளக்க வைத்து விட்டீர்களே!
- மணிமாறன், திருவண்ணாமலை; நடராஜன், சென்னை.

யுகபாரதியின் ‘ஊஞ்சல்தேநீர்’ தொடர் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது.
- வள்ளிநாயகம், சென்னை;
மனோகர், கோவை; சைமன்தேவா, விநாயகபுரம்.

பட்டையைக் கிளப்பும் அசாமிய சினிமா மலைப்பு தந்தது. சிறிய மாநிலத்தில் இவ்வளவு திரைப்படங்கள் எடுக்கப்படுவது பெரிய விஷயம்தான்.
- வண்ணைகணேசன், சென்னை.

ஐந்து வரி கவிதையான பயம் உடலை சிலிரக்க வைத்துவிட்டது.
- பூதலிங்கம், நாகர்
கோவில்; கைவல்லியம், மானகிரி.

கச்சேரி பற்றிய சொற்களைப் புரிந்துகொள்ள சூப்பர் டைமிங்கில் வாதூலனின் கட்டுரை உதவியது. டிசம்பர் கச்சேரி சீசனுக்கு முன்பே கமகம வென ஆலாபனை செய்த சங்கீத ட்ரெய்லர் அருமை.
- கைவல்லியம், மானகிரி; ஜானகிரங்கநாதன், சென்னை.

கிச்சன் சினிமா கலகல பிளஸ் கமகம என அன்னிக்கும் இன்னிக்கும் செம.
- மயிலை கோபி, சென்னை.

நூறுகோடி ரூபாய் மதிப்பிலான தங்க காலணி கிறுகிறு மயக்கம் தந்தது.
- நவீன்சுந்தர், திருச்சி.

காட்டு விலங்குகள் மேல் இருந்த அன்பு காரணமாக அரசியலில் இறங்கிய எஸ்கோபாரின் மீது என்ன தப்பிருக்கிறது?
- ப்ரீத்தி,
செங்கல்பட்டு.

அறம், இப்படை வெல்லும் படங்களுக்கான விமர்சனம் அசத்தல்.
- மூர்த்தி, பெங்களூர்; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

செல்லாத ரூபாய் நோட்டுகள் டன் ரூ.128க்கு தென் ஆப்பிரிக்கா செல்கிறதா? கொடுமை. நேரத்தை கம்மி பண்ணச் சொன்ன மாணவர்களின் போராட்டம் நியாயமானது. பிலிப்பைன் அழகி, ரியல் அறிவாளிதான். பிரியாணிக்கு ஃபைன் அதிரவைத்தது
- மனோகர், கோவை; கார்த்திகா, திருவண்ணாமலை; சேவுகப்பெருமாள், பெருமகளூர்.