குப்பைக் கிடங்கில் சுற்றுலா!உலகில் ஓர் இடம் சுற்றுலா ஸ்பாட்டாக மாற என்ன வேண்டும்?

புல்வெளி, அருவி, உயரமான மலை, ஆறு என ஏதாவது இருக்கவேண்டும்.

ஆனால் மக்கள் இடம் மாறி வந்ததாலேயே ஜப்பானில் புது டூரிஸ்ட் ஸ்பாட் கிடைத்திருக்கிறது! ஒசாகாவில் கழிவுக்கிடங்கு செயல்பட்டு வருகிறது. ஆனால், வெளியே அதன் கட்டிட அலங்காரம் காமிக்ஸ் போல கலர்களை வாரியிறைத்ததால் டூரிஸ்டுகள் பலரும், யுனிவர்சல் ஸ்டூடியோவின் தீம் பார்க் என நினைத்து உள்ளே வந்துவிடுகிறார்களாம்.

2001ம் ஆண்டு கழிவுக்கிடங்கின் டிசைனை தொழில்நுட்பம், சூழல் மற்றும் கலை ஆகியவற்றின் மிக்ஸாக Friedensreich Hundertwasser என்ற புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் உருவாக்கினார். கழிவுக்கிடங்கை ஏதோ மேஜிக் உலகம் என நினைத்து இதுவரை 12 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். இதில் 30% பேர் வெளிநாட்டவர்கள்!                      

ரோனி