கால்பந்தில் முதல் பெண் ரெஃப்ரீ!
இன்று ஆண்கள் கோலோச்சும் அனைத்து துறையிலும் பெண்களின் பங்களிப்பு, புல்லட் வேகத்தில் அதிகரித்து வருவது பெருமைக்குரிய ஒன்று. ஐரோப்பாவின் முக்கிய கால்பந்து போட்டியில் உலகில் முதன்முறையாக பெண் ஒருவர் ரெஃப்ரீயாகிறார் என்பது பலரும் கவனிக்காத புது நியூஸ். ஜெர்மனியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரியும் நீச்சல் வீராங்கனையுமான பிபியானா ஸ்டெய்ஹாஸ்தான் அந்த முதல் பெண் ரெஃப்ரீ.
அண்மையில் ஜெர்மனி கால்பந்து சங்கமான DFB, பெர்லின் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டிக்கு பிபியானாவை ரெஃப்ரீயாக அஃபீசியலாக அறிவித்து உலகெங்கும் அப்ளாஸ்களை அள்ளியுள்ளது. ‘‘நான் அறிமுகமாகும் பண்டெஸ்லிகா லீக் போட்டியை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்...’’ என்று மகிழ்ச்சி கரைபுரள பேசும் பிபியானா இதற்கு முன்பே சில விளையாட்டுப் போட்டிகளுக்கு ரெஃப்ரீயாக இருந்திருக்கிறார். ஐரோப்பாவின் டாப் 5 கால்பந்து போட்டிகளில் ஒன்றான பண்டெஸ்லிகாவில் பிபியானா அறிமுகமானது போட்டியின் ஆக்ரோஷ டெம்போவை எகிற வைத்துள்ளது.
|