பெண் கல்வி இலவசம்!



- ரோனி

‘பெண்கள் இனி முதலாம் வகுப்பு முதல் டிகிரி வரை அரசு, தனியார் என எதிலும் இலவசமாகப் படிக்கலாம்...’ என கர்நாடக அரசு அண்மையில் அறிவித்துள்ளது. ‘‘ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்குள் வரும் 18 லட்சம் ஏழை மாணவிகள் இந்த திட்டத்தினால் பயனடைவார்கள்...’’ என்கிறார் உயர்கல்வி அமைச்சரான பசவராஜ் ராயரெட்டி. மத்திய அரசின் சட்டப்படி 8ம் வகுப்பு வரை இந்தியாவில் இலவச கட்டாயக்கல்வி உண்டு. கர்நாடகாவின் பிளான்படி ஒரு மாணவிக்கு ஓராண்டுக்கு ரூ.611 அரசு செலவழிக்கவிருக்கிறது.

ஆனால், இதே திட்டம் பஞ்சாப், தெலுங்கானாவில் முன்பே பிராக்டிகலாக செயல்பட்டு வருகிறது. அதிலும் பஞ்சாபில் முதல் வகுப்பு டூ பிஎச்.டி வரை இலவசம்தான். ‘‘நாங்கள் பிற மாநிலத்திட்டங்களை காப்பி அடிக்கவில்லை. ஏழை மாணவிகளுக்கு தடையின்றி கல்வியளிப்பதே எங்கள் லட்சியம்...’’ என்கிறார் அமைச்சர் பசவராஜ்.