காதலுக்காக மகுடம் துறக்கும் இளவரசி!
- ரோனி
அரசர் குடும்பம் என்றாலும் இங்கிலாந்தும் ஜப்பானும் வேறுபடுவது மேரேஜ் மேட்டரில்தான். கேட் மிடில்டன் சாதாரண பெண் என்றாலும் இளவரசர் வில்லியமை மணந்து அரச குடும்பத்தில் ஒருவரானார். ஆனால், தன்னுடன் படித்த சக மாணவரை மணப்பதற்காக ராயல் கிரீடத்தை துறக்கவிருக்கிறார் ஜப்பான் இளவரசி! அகிகிட்டோவின் 4 பேரப்பிள்ளைகளில் ஒருவரான மாகோ, விரைவில் தன்னுடன் படித்த சக மாணவரை மணக்கவிருக்கிறார் என்பதை இம்பீரியல் ஹவுஸ் அறிவித்துள்ளது.
மாகோவின் காதலரான கேய் கொமுரோ, சட்ட அலுவலகத்தில் பணிபுரிகிறார். 1817ம் ஆண்டு இயற்றப்பட்டதிலிருந்து இதுவரை சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யப்பட்டதில்லை. இந்நிலையில் முதல்முறையாக அரசர் அகிகிட்டோ பதவி விலகுவதற்கான திருத்தத்தை சட்டநிபுணர்கள் உருவாக்கியுள்ளனர். இளவரசி மாகோ, காதலரான கொமுரோ இருவரும் இன்டர்நேஷனல் கிறிஸ்டியன் பல்கலைக்கழக மாணவர்கள். லெய்ஷ்டர் பல்கலைக்கழக டிகிரி பெற்ற மாகோ, மியூசியம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
|