மீசையால் பறிபோன வேலை!



வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்... அமெரிக்க மாப்பிள்ளையா, எதுக்கு என்கொய்ரி? உடனே மேரேஜ்... கவர்மெண்ட் வேலையா? காலத்திற்கும் நம்பலாம்... என்ற முரட்டு முட்டாள்தனம் மக்களின் மைண்டில் காலங்காலமாக படிந்துவிட்டதற்கு கீழுள்ள மேட்டரும் சாம்பிள்தான். பாகிஸ்தானைச் சேர்ந்த ஹசீப் அலி சிஸ்டி, ஆசிரியர்பணி செய்து வருகிறார். திடீரென பள்ளி நிர்வாகத்திடமிருந்து அழைப்பு. உடனே பணியை விட்டு விலகிக்கொள்ளுங்கள் என்று ஒற்றை வரி ஆணை.

பதறிய ஹசீப், ‘நான் தவறாக ஒன்றும் செய்யவில்லையே...’ என கூற, அதற்கு நிர்வாகம் கூறிய பதில்தான் ஆசம். ‘நீங்கள் இளமையாக, பார்க்க பேரழகனாக இருக்கிறீர்கள். குறிப்பாக மீசை வைத்துள்ளீர்கள். இதை பார்க்கும் மாணவிகள் உங்களை காதலிக்க சான்ஸ் உள்ளதே!’ கேட்ட ஆசிரியர் ஹசீப்புக்கு தலை கிறுகிறுத்துவிட்டது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான நட்பு என்பது எந்தக்காலத்தில் சாத்தியமாகப்போகிறது என ஃபேஸ்புக்கில் தன் மனதை கொட்டித்தீர்த்துவிட்டார்.