டெரர் ஷாக்



- ரீடர்ஸ் வாய்ஸ்

ஓபன் ஹார்ட்டாக ‘One heart’ இயக்குநர் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டி ஸ்மார்ட் பியூட்டி.
- த.சத்தியநாராயணன், சென்னை; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; மனோகர், கோவை.

நானூறு பள்ளிக்குழந்தைகள், குடியிருப்புவாசிகள் என அனைவரையும் காப்பாற்றிய கான்ஸ்டபிள் அபிஷேக் படேலுக்கு கிரேட் சபாஷ்.
- டி.எஸ்.தேவா, கதிர்வேடு.

ஐயமிட்டு உண் என்ற ஐடியாதாரியான ஐஸா ஜாஸ்மின் முயற்சி, உதவும் உள்ளங்களுக்கு உந்துசக்தி.
- மனோகர், கோவை.

ஏபி வைத்த ஆப்பு செய்தி, இரண்டெழுத்துகளில் இப்படியும் நடக்குமா என்று மிரட்டிவிட்ட விநோத செய்தி.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

புத்தகங்களை விரும்பாத பணக்காரராக வாழ்வதைவிட புத்தகங்களை விரும்பும் ஏழை எழுத்தாளராக இருப்பதில்தான் மகிழ்ச்சி என லட்சியத்துடன் வாழும் டீக்கடை ரைட்டர் லக்ஷ்மண்ராவ் அரிய மனிதர்.
- ஆர்.சண்முகராஜ், சென்னை; சுகந்தி நாராயண், வியாசர்நகர்.

ஜார்க்கண்ட் ஈ.பி போர்டு அனுப்பிய பில் பி.ஆர்.குஹாவுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் டெரர் ஷாக்.
- ஆர்.சண்முகராஜ், சென்னை.

பிளாஸ்டிக் டேஞ்சரை விளக்கி பாட்டிலின் தரத்தை ஆழமாக விவரித்து அலர்ட் செய்த எங்கள் செல்ல குங்குமத்திற்கு தேங்க்ஸ்!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.

கன்னிமாரா நூலகம் பற்றிய கிரிஸ்பியான கச்சித தகவல்கள் வாசகர்களுக்கு சிறப்பு போனஸ் பரிசு. அறிந்த இடம் அறியாத விஷயம், சென்னை பற்றிய ஸ்பெஷல் அற்புத கலைக்களஞ்சியம்.
- ராம.கண்ணன், திருநெல்வேலி; பூதலிங்கம், நாகர்கோவில்; ஆர்.சண்முகராஜ், சென்னை; கணேசன், சென்னை; ஜனனி கார்த்திகா, திருவண்ணாமலை; சுகந்தி நாராயண், வியாசர்நகர்; கைவல்லியம், மானகிரி.

வண்ணங்களில் அரசியல் குழைத்த ஓவியர் வீரசந்தானம் பற்றிய யுகபாரதியின் பதிவு நெகிழ்ச்சி.
- மனோகர், கோவை.

சீனியர் நயனும் ஜூனியர் சிவாவும் தொட்டும் தொடாமல் இருப்பது கெமிஸ்ட்ரியில் இடிக்கிறதே சார்!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.

பன்காதாரா கிராமத்தின் ரமேஷ் - விம்லா தம்பதியின் செயல்பாடு பல தலைமுறைகள் வாழ்த்தும் அற்புதப்பணி.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை; எஸ்.பூதலிங்கம், மயிலாடுதுறை.

‘மாமனார் மெச்சிய மருமகன்’ என விஷ்ணு விஷால் - கேத்தரின் தெரஸா ஸ்டில்கள் இளமை குதூகலம்.
- நிவேதா, திருவண்ணாமலை.

பழங்குடி பெண்ணான பூமாய் விமானபைலட் ஆனது அசல் சாதனைதான். வாழ்த்துகள்.
- ஆனி அஞ்சலின், விநாயகபுரம்.

இரோம் ஷர்மிளாவின் லவ் ஸ்டோரி நெஞ்சை கனக்கச் செய்த கவிதை.
- சத்தியநாராயணன், சென்னை.