உலகின் அழகற்ற அழகி!
-ரோனி
மிஸ் வேர்ல்ட், மிஸ்டர் வேர்ல்ட் போட்டிகளை நடத்துவது மனிதர்களுக்கு பெருமை. ஆனால், நம்மோடு இருக்கும் விலங்குகளுக்கும் இதுபோல போட்டிகளில் கலந்துகொண்டு பல கப்புகள், மெடல்களை நெஞ்சில் குத்திக்கொண்டு தினசரிகளில் போட்டோ வர ஆசையிருக்குமே!
 அப்படியொரு லொள் லொள் ஸ்டோரிதான் இது. அமெரிக்காவின் பெடலுமா நகரில் என்பிசி டிவி சேனல் ஆண்டுதோறும் நடத்தும் உலகின் அழகற்ற நாய் போட்டியில் மார்த்தா என்ற Neapolitan mastiff வகை நாய் சாம்பியன் பரிசை தனது தொளதொள முகத்தின் மூலம் பெற்றுள்ளது.
ஃபைனலில் 12 நாய்களிடம் மல்லுக்கட்டி ஜெயித்த பட்டம் இது. மார்த்தாவின் வயது 3. எடை 125 பவுண்டுகள் என மெகா சைசில் நின்றாலும் பார்வைத்திறன் மினிமம்தான். மோப்ப சக்தி மட்டும் பிளஸ். சோனோமா நகரில் பார்வையிழந்து தட்டுத்தடுமாறிய மார்த்தாவை, இதன் ஓனர் ஷிர்லி, டாக்வுட் விலங்குகள் காப்பகம் வழியாக பராமரித்து சிகிச்சையளித்ததில் கிடைத்ததுதான் மார்த்தாவின் ராஜபார்வை. மார்த்தாவுக்கு விருதுடன் கிடைத்துள்ள பரிசு 1500 டாலர்கள்!
|