உதவும் கரங்கள்!
-ரோனி
அமெரிக்காவின் ப்ளோரிடாவைச் சேர்ந்த அஸ்வின் கல்யாண்துர்க் என்பவர், கையாலே 5 கி.மீ. நடந்து ஷேர் ஆட்டோ காசை மிச்சம் செய்திருக்கிறார். நோவா யுனிவர்சிட்டியில் மருத்துவ மாணவரான இவர், யுனிகார்ன் எனும் குழந்தைகள் நல அமைப்புக்காகத்தான் கை தேய நடந்துள்ளார்.
 சின்ன பிரேக் விட்டு எட்டு மணி நேரம் கையை காலாக்கி நடந்த சாதனை வீணாய் போகக்கூடாது என தன் கர சேவையை கின்னஸ் சாதனைக்கும் அனுப்பியுள்ளார் கல்யாண். இதற்கு முன்பு அமெரிக்காவின் புற்றுநோய் அமைப்புக்காக 12 மணிநேரம் தன் கையால் உழைத்துள்ளார் இந்த அமெரிக்க மாணவர். சரி. அடுத்து? ‘தேர்வு வருகிறது. படிக்கப் போகிறேன். அதை முடித்துவிட்டுப் பார்க்கலாம்!’ கூலாக சொல்கிறார் கல்யாண்.
|