பர்த்டே ட்ரீட்!



-ரீடர்ஸ் வாய்ஸ்

விஜய் 61 கவர் ஸ்டோரியும், அட்டைப் படமும் தளபதியின் புகழுக்கு செம மாஸ் கிரேஸ்! விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் பர்த்டே ட்ரீட்!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி. த.சத்தியநாராயணன், சென்னை. ப்ரீத்தி, செங்கல்பட்டு.

கழிவுநீரை சுத்திகரித்து வெற்றி பெற்ற செல்வனுக்கு சபாஷ்! கழிவுநீரின் மூலமும் காசு பார்க்கலாம் என்று நிரூபித்த செல்வனின் வழியை அனைவருமே பின்பற்றலாமே!
- கே.மாணிக்கவாசகம், கும்பகோணம். மனோகர், கோவை - 14.

‘வாழ்றதை எப்படி நிறுத்த’ என ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ இயக்குநர் இன்பசேகர் ஒரே போடாகப் போட, சொல்ல இனி என்ன இருக்கிறது?
- மயிலை கோபி, சென்னை - 83.

உலகம் அழியப்போகிறது என்பதை விட ரொம்பத்தான் பயமுறுத்துகிறது ‘நோய்சூழ் உலகு’ கட்டுரை. உயிர்க்கொல்லி வைரஸின் வருங்காலம் பற்றி பேசிய கட்டுரை அருமை. ஆயுதங்கள் இருக்கும். ஆனால், அதை ஏந்த மனிதர்கள் இருக்க மாட்டார்கள் என்ற வரிகள் டெரிபிள் சிக்னல்.
- நவீன்சுந்தர், திருச்சி. மாணிக்கவாசகம், கும்பகோணம். சத்தியநாராயணன், சென்னை. ப.மூர்த்தி, பெங்களூரு.

‘சர்வதேச டேட்டிங் விண்ணப்பம்’ தலைப்பு பார்த்தவுடன் டென்ஷனான நெஞ்சு, வெள்ளை காண்டாமிருக மேட்டர் படித்ததும்தான் கூல் ஆனது.
- ஆர்.சண்முகராஜ், சென்னை.

‘குரங்கு பொம்மை’ டைட்டில் கலாட்டா சுவாரஸ்யம். ஹீரோயினை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அத்தனை பாந்தம்.
- விஜயநிர்மலன், சென்னை - 125.

இன்றைய ஃபேஷன் அப்டேட்டான போம் போம் பற்றிய ஷாலினியின் கட்டுரை அழகின் ஆராதனை.
- மயிலை கோபி, சென்னை. ஜானகி ரங்கநாதன், சென்னை - 4.

முதல்வர் எம்ஜிஆரிடமும் தன் கொள்கையை விட்டுக்கொடுக்காத பெரியார்தாசன், பேராண்மை கொண்ட ஆளுமைதான். யுகபாரதியின் ‘ஊஞ்சல் தேநீர்’ பாதுகாக்கப்படவேண்டிய ஆவணம்.
- தா.சைமன் தேவா, விநாயகபுரம். மனோகர், கோவை.

‘கவிதை வன’த்தில் சீதா எழுதிய மதுக்குட்டியும் மலர்தூதனும், கூர்மதியன் எழுதிய குத்துக்கல் ஐயனார் என இரு கவிதைகளும் ஒற்றைச்சிறகு காம்பினேஷன் பியூட்டியில் கொள்ளை அழகு!
- விஜயநிர்மலன், சென்னை - 125.

‘Hot Dancers’ என குத்தாட்ட நடிகைகளின் படங்களைப் போட்டு, எங்கள் மனசில் மோகமூட்டம் ஏற்படுத்தியது நியாயமா?
- ஆர்.சண்முகராஜ், சென்னை.

‘காட்ஃபாதர்’ தொடரில் ஆள்கடத்தலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சி.
- டி.எஸ்.தேவா, கோவை - 15.

உணவு, விளையாட்டு, ஓய்வு மூலம் டீன் ஏஜ் பிபியை ஒழிக்கலாம் என்ற கட்டுரை நவீன காலத்திற்கேற்ற டைமிங் எச்சரிக்கை.
- மாணிக்கவாசகம், கும்பகோணம். மனோகர், கோவை.