நட்சத்திர ரிசார்ட்!



-ரோனி

வானத்திலுள்ள நட்சத்திரங்களை பார்த்தபடியே சுட்டிகளுக்கு கதைகள் சொல்வது, நிலாவைக் காட்டியே குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது எல்லாம் இன்று கிடையாது. இப்போது இந்த வேலையை சுட்டி டிவியே செய்துவிடுகிறது. மழை வரும்போதுதான் பலருக்கும் வானம் ஒன்று இருப்பதே நினைவுக்கு வருகிறது. வானத்தைப் பார்த்தாலும் நட்சத்திரங்களே தெரியாதபடி தூசிகளும் மறைத்துள்ளதால் எப்படி  எட்டிப்பார்த்தாலும் நட்சத்திரங்களைப் பார்ப்பது சிரமம்.

ஆனால், ராஜஸ்தானின் ஆஸ்‌ரோபாட் உங்களுக்கு சூப்பர் சான்ஸை தருகிறது. எப்படி? டெல்லியிலிருந்து 5 மணி நேர பயணத்தில் ஷரிஸ்கா தேசியப் பூங்கா அருகிலுள்ள ஆஸ்‌ரோபாட் சரிஸ்கா எனும் இந்தியாவின் இரண்டாவது அதிக இருளான ஏரியாவை அடையலாம். பகலில் சாதாரணமாக இருக்கும் இந்த இடம் இரவானதும், பால்வெளிக்குச் சென்றுவிட்டது போல நட்சத்திரங்களின் பளிச்சிடும் கொள்ளை அழகில் சொக்கிப்போவீர்கள். இங்குள்ள ரிசார்ட்டில் தங்கி நட்சத்திரங்களை ஸ்லோமோஷனில் ரசிக்க, பர்ஸ் கொஞ்சம் கனமாக இருக்க வேண்டும். யெஸ். நாள் ஒன்றுக்கு வாடகை ரூ.13 ஆயிரம்!