சொகுசு காரிலும் குப்பைத்தொட்டி!
-ரோனி
இந்திய அரசு ஸ்வாச் பாரத் திட்டத்தை அறிவித்ததிலிருந்து அதனை நானும் கடைப்பிடிக்கிறேனே என்று ஈசலாய் கிளம்பும் ஆர்வக்கோளாறு முயற்சிகள் கொஞ்ச நஞ்சமில்லை. இதோ, ஜோத்பூரில் குப்பைகளை குப்பைத்தொட்டியில்தானே போடவேண்டும் என்று யோசித்து செய்த அமேசிங் ஐடியாவை அமெரிக்காகாரர் கூட கனவிலும் நினைத்திருக்க முடியாது.
 குப்பைத்தொட்டியில் குப்பையை போடவேண்டும் என்பதுதான் கான்செப்ட். ஆனால், போகுமிடமெல்லாம் குப்பைத்தொட்டியைத் தேடி அலைந்தால் நன்றாயிருக்குமா என யோசித்த ஜோத்பூர் புத்திசாலிகள், தங்கள் காரிலேயே குப்பைத்தொட்டியை இணைத்துவிட்டனர்! ‘‘பிரதமரின் திட்டத்துக்கு எங்கள் அளவில் அளிக்கும் ஆதரவு இது. குப்பையை காரிலேயே சேகரித்து வைத்து கொட்டுவதால் எங்களுக்கு தேச கடமையாற்றிய சந்தோஷம் மற்றும் திருப்தி கிடைக்கிறது...’’ என்கிறார்கள். இங்கு பலரும் சாதாரண கார் மட்டுமல்ல, சொகுசு காரான ஆடியிலும் குப்பைத் தொட்டியை மாட்டி பீதியைக் கிளப்பியுள்ளனர்.
|