Heroines on spots!



ரிலாக்ஸ் ரவுண்ட் அப்

-மை.பாரதிராஜா

‘ஷாட் பிரேக்ல ஹீரோயின்ஸ் என்ன செய்வாங்க..? எப்படி பொழுதைப் போக்குவாங்க..?’ சிம்பிள் க்வெஸ்டீன். பட், ஆன்சர்? ‘‘I love  music.. so, listening music’’ என ஹெட் போனுடன் தலையசைத்து புன்னகைப்பார்கள் பலர். இன்னும் சிலர், ‘‘I like books.. படிப்பேன்...’’  என கையில் வைத்திருக்கும் புத்தகங்களை எடுத்துக் காண்பிப்பார்கள். இதையும் தாண்டி அவர்களின் ரிலாக்ஸ் டைம் ஷெட்யூல் என்ன..?

* லண்டன் பறவை எமி ஜாக்சனுக்கு சென்னை வெயிலின் மீது தனி கிரேஸ் உண்டு. கேரவன் இருந்தாலும் நோ இன்ட்ரஸ்ட். வெயிலோ, புயலோ, மழையோ, கடமை, கண்ணியம், கட்டுப்பாடுதான். சக நடிகர்களுடன் ஒன்றாக அமர்ந்து சிரித்துப் பேசி மகிழ்வது எமிக்கு பிடிக்கும். லொகேஷன் ஸ்பெஷலாக இருந்தால் உடனே தன்னுடைய கேமராவை எடுத்து ஒளி ஓவியராகி விடுவார்!

* வெளியூர் படப்பிடிப்புகளில் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வரும் குழந்தைகள் தன்னை அடையாளம் கண்டுகொண்டால் அவர்களுடன் நேசக்கரம் நீட்டி, ‘கூட்டத்தில் ஒருத்தி’யாகிவிடுவார் ப்ரியா ஆனந்த்.

* ஆங்கில நாவல்களை விரும்பிப் படிப்பது நித்யா மேனனின் பாலிஸி. தன் கனவு இயக்குநர்களின் படங்களில் பணியாற்றினால் ஆக்ட்ரஸ் என்பதை மறந்து அசிஸ்டென்ட் டைரக்டராகி விடுவார்!

* கேரவனையே தன் வீட்டின் மினி ஹாலாக ஆக்கிவிடுவார் சமந்தா. ஆங்கிலம் அத்துப்படி என்பதால் கூடவே எப்போதும் ஒரு செட் ஆங்கில நாவல்கள் கைவசம் இருக்கும். தவிர, அரை டஜன் ஃபேவரிட் மூவிஸ் டிவிடி-ஸ். மொத்தத்தில் சமந்தாவின் ரிலாக்ஸிலும் புரொஃபஷன் தெறிக்கும்!

* கோலிவுட்டை பொறுத்தவரை கேத்தரின் தெரஸா கொஞ்சம் மூடி டைப். கேரவனில் புகுந்து கொள்வார். ஆனால், டோலிவுட்டில் செம ஃப்ரெண்ட்லி பொண்ணு. இப்போது தமிழ் கற்றுக்கொள்ள விரும்புவதால், யூனிட்டில் பேசுபவர்களின் தமிழை காது கொடுத்து கேட்டு வருகிறார்.

* சென்னை வந்தால் பிரேக்குகளில் கேரவனில் ஒளிந்துகொள்ளும் தமன்னா, பாலிவுட், டோலிவுட் ஸ்பாட்டுகளில் செம ஜாலி பொண்ணு. ‘Good food + great company + fun time while shooting’ என ஃபீலிங் ஹேப்பியாகிவிடுவார்.

* கொஞ்சமும் ஈகோ இல்லாதவர் ‘ஐஸ்’வர்யா ராஜேஷ். ஸ்பாட்டில் உடன் நடிக்கும் பெரிய நடிகைகள் இவரை கண்டு கொள்ளாமல் போனால் எழுந்து நின்று வணக்கம் வைத்து நட்புக்கரம் நீட்டிவிடுவார். அப்புறமென்ன, புது ஃப்ரெண்டுடன் கலகலக்கும் கச்சேரி.

* நிஜமாகவே ராய்லட்சுமி ஒரு சோலோ செல்ஃபி பொண்ணு. மேக்கப் பண்ணுவதில் தொடங்கி, காஸ்ட்யூம், லொகேஷன் என ஒவ்வொரு நொடியும் செல்ஃபி எடுத்து கொண்டாடுவார். அவரது மேக்கப் ஆர்ட்டிஸ்ட் புதுப்புது மேக்கப் பொருட்களை ராய்லட்சுமிக்கு அறிமுகப்படுத்தி அழகு பார்ப்பார். செல்ஃபியால் நிறைந்தது அவரது உலகம்.

* பாலிவுட் பாதாம்கீர் ப்ரியங்கா சோப்ரா, ஒரு ஃபேஷன் குயீன். செட்டுக்குள் என்ட்ரியானால் கூடவே ஜாலி கேலி கச்சேரி ஸ்டார்ட் மியூசிக் ஆகிவிடும். ப்ரியங்காவுக்கு இப்போது ஹாலிவுட்டிலும் எக்கச்சக்க ஃப்ரெண்ட்ஸ். ஸோ, ஸ்பாட்டில் ப்ரியங்கா இருந்தாலே ‘life is so beautiful’ என உணர்த்திவிடுவார்.

* அனுஷ்காவை யூனிட்டில் பார்ப்பவர்கள் எல்லாருமே அவரிடம் யோகா டிப்ஸ் கேட்க ஆரம்பித்துவிடுவர். ஃப்ரெஷ் புன்னகையுடன் டிப்ஸை அள்ளி வீசுவார். யூனிட்டில் ஆன்மிகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இருந்தால் அவர்களிடம் தனது ஸ்பிரிச்சுவல் சந்தேகங்களை எல்லாம் கேட்டு அப்டேட் செய்துகொள்வார்.

* ஸ்ருதிஹாசன் ஓர் இசைக்குயில். காஸ்ட்லியான ஃபாரீன் ஹெட்போனும், பாப் ஸாங் லோடட் ஐபேடுமாக உற்சாக ஊற்றெடுக்க ஆரம்பித்துவிடும் பொண்ணு.

* உடன் நடிப்பது சின்ன ஹீரோவோ, பெரிய ஹீரோவோ, அது தன்னுடைய படம் என்று நினைப்பது நயன்தாராவின் பாலிஸி. அதனால் செட்டில் எப்போதும் ஓடியாடித் திரிவார். ஸ்பாட்டில் சைலன்ட்டை ரொம்பவே விரும்புவார். ஷாட் முடித்த பின்பும் கேரவன் தேடி ஓடாமல், சக நடிகர்களின் நடிப்பைப்பார்த்து உற்சாகப்படுத்துவது நயனுக்கு பிடித்தமானது. 

* சென்னையைப் பொறுத்தவரை காஜல் அகர்வால் ஒரு கேரவன் பறவை. ஆனால், அவுட்டோரில் சுற்றுலா சூறாவளி. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் உள்ளூர் மக்களின் மனங்களில் இடம்பிடித்துவிடுவார். அவர்களாகவே காஜலுக்கு மட்டும் தங்கள் வீட்டில் இருந்து ஸ்பெஷலாக டீ, காஃபி, ஸ்நாக்ஸ் என உபசரித்து அசத்துவது எல்லா ஊர்களிலும் நடக்கும். ‘The best moments always happen unexpectedly.  Happiness is doing something for someone who doesn’t expect it at all...’ என்பது காஜலின் தத்துவம்.

* ரெஜினாவுக்கு நட்பு வட்டம் அதிகம். எந்த wood என்றாலும் சொந்த ஊர் போல செம ரிலாக்ஸாக இருப்பார். பிரேக்குகளில் மொபைலும் கையுமாக காட்சி தருவார்.

* ப்யூர் வொயிட் பேப்பரும், பென்சிலும் கிடைத்தால் போதும்... மாடலிங் பால்கோவா பார்வதி நாயர் ஹேப்பியாகி, மனதில் பட்டதை வரைய ஆரம்பித்துவிடுவார். செம ஹாட் காஸ்ட்யூமில் இருந்தால், செல்ஃபி க்ளிக்கில் மலரும் அவரது உலகம்.

* அவுட் ஆஃப் மும்பை படப்பிடிப்பு என்றால் சில சமயங்களில் ஹன்சிகாவுடன் அவரது அம்மாவும் லொகேஷன்களுக்கு ஆஜர் ஆகிவிடுவார். பொறுப்பான மகளாக தன் அம்மாவை கவனித்துக் கொள்வது, அம்மாவிற்கு மேக்கப் போட்டுவிடுவது, அவரது ஹேர் ஸ்டைலில் கவனம் செலுத்துவது என பரபரப்பாகிவிடுவார் ஹன்சி.

* ‘மைண்ட் யுவர் ஓன் பிசினஸ்’ என தீபிகா படுகோனேவை யாரும் சுட்டிக் காட்ட முடியாது. தீபிகா அவ்வளவு புரொஃபஷனல். ஷாட் பிரேக்கில் ஹாலிவுட் படங்களை அப்டேட் செய்வது தீபிகாவிற்கு பிடித்தமானது.

* அவுட்டோர், இன்டோர் என எதிலும் சன்னி லியோன் ரொம்பவே துறுதுறு. ஸ்பாட்களில் ராட்சத ஃபேனுக்கு முன்னால் சிலுசிலுப்பதும் உண்டு. சமயங்களில் பேட்டரியில் இயங்கக் கூடிய மினி மின்விசிறியை எடுத்துக்கொண்டு கண்ணில் தட்டுப்பட்ட பிளாஸ்டிக் சேரில் ஸ்டேட்டஸ் பார்க்காமல் ரிலாக்ஸாகிக் கொண்டிருப்பார்.

* டெக்னாலஜி பொண்ணு + ஹெல்த்தி ஃபுட் பிரியை. இதுதான் அமலாபால். லேட்டஸ்ட் டெக்னாலஜி, ஃபேஷன் அத்தனையும் அத்துபடி. ஆல் டைம் ட்விட், இன்ஸ்டா அரட்டை, நியூ காஸ்ட்யூம் செல்ஃபி என எப்போதும் ஆக்டிவ்வாக ஃப்ரெண்ட்ஸ்களிடம் chat செய்வது அமலாபாலின் அட்ராசிடி.

* நிக்கி பேச ஆரம்பித்தாலே எதிரில் உள்ளவர்களை எல்லாம் ‘அண்ணா’வாக்கிவிடுவார். பிறகென்ன, யூனிட்டில் உள்ளவர்கள் தங்கள் அன்புத் தங்கையின் பாசத்தில் கட்டுண்டு விடுவர்.