14 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பர்ஸ்!



-ரோனி

நண்பர்களிடம் ஒரு ஷர்ட்டை கடன் கொடுத்தாலே திரும்ப நமக்கு கிடைப்பது சந்தேகம்தான். அப்படியிருக்க தொலைந்துபோன பர்ஸ், ரூபாயோடு 14 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பக் கிடைத்தால் அது மிராக்கிள்தானே! 2003ம் ஆண்டு லண்டனில் டிமோத்தி பரோஸ் என்பவர் மதுபான திருவிழாவில் 10 பவுண்டுடன் தன் கண்ணுக்கு கண்ணான பர்ஸைத் தொலைத்துவிட்டார். ‘ஐயோ...’ என்று அவர் கதறியபோது, அந்த பர்ஸ் கில்ஸ் அண்ட் கோவிடம் சிக்கியிருந்தது.

பர்ஸை எடுத்தவர்கள் பணத்தை எடுக்காமலிருப்பார்களா? ஆசைத்தீர ‘குடி’த்து செலவழித்துவிட்டார்கள். பின் குற்றவுணர்வு முள்ளாய் உறுத்த, டிமோத்தியின் காசில் வாங்கி குடித்த சரக்கின் மீது சத்தியம் செய்து ‘டிமோத்தி பரோஸ் சேலஞ்ச்’ மதுபானப் போட்டியையும் கமுக்கமாக நடத்தி வந்திருக்கிறார் கில்ஸ். பின் ஃபேஸ்புக் மூலம் தகவல் சொல்லி பர்ஸை டிமோத்தியிடம் பல ஆண்டுகளுக்குப் பின் பணத்துடன் ஒப்படைத்திருக்கிறார் கில்ஸ்!