வினை விதித்தவன்...



பட்டுக்கோட்டை ராஜா

இவர்களின் தெருவில் திறக்கப்பட்டு வெற்றிகரமாய் வருமானம் பார்த்துக் கொண்டிருக்கும் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்கிற கோரிக்கையுடன் இளநகை, வாசு இருவருமாய் அதிகாலை நேரத்திலேயே ஆத்மநாதனைப் பார்க்க வந்துவிட்டார்கள். அவர் வீட்டைவிட்டு வெளியே கிளம்பிவிட்டால் பிறகு அவரைச் சந்திப்பது கடினம் என்று வாசு எச்சரிக்கை செய்திருந்தான்.

ஆத்மநாதன் சமூக ஆர்வலர். அதனாலேயே திருமணத்தை மறுத்தவர். ஊரில் எங்கு தப்பு நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பவர். இவரைப் பார்த்தாலே அரசியல்வாதிகளின் வயிறு கலங்கும். சார்பதிவு அதிகாரியாய்ப் பதவி உயர்வு பெற்று நல்ல வருமானத்தில் இருந்தவர், தன் அலுவலகத்தில் இருக்கும் ஊழல்பெருச்சாளிகளின் கொட்டம் காணத் தாங்காமல் வேலையை உதறிவிட்டு வெளியே வந்தவர்.

வந்ததும் முதல் வேலையாய்த் தன் அலுவலகத்தில் நடக்கும் தகிடுதத்தங்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் எழுதிப் பலரையும் சிக்க வைத்துவிட்டார். இவற்றையெல்லாம் சொல்லித்தான் வாசு, இளநகையை இங்கே அழைத்து வந்திருந்தான். ஆத்மநாதனுக்கு வயது அறுபதைக் கடந்திருக்கும். எதிரே கிடந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தவர், ``வாங்க தம்பிகளா... என்ன காலையிலேயே வந்திருக்கீங்க?’’ என்றார்.

அய்யா என்பேரு வாசு, இவன் இளநகை. சன்னதித் தெருவில்தாங்கய்யா எங்க வீடிருக்கு. குடும்பங்கள் இருக்கிற தெரு நடுவில் ஒருவாரத்துக்கு முன்னாடி அரசாங்க பார் ஒண்ணு திறந்திட்டாங்க... குடிச்சிட்டு போதையில் குடிமகன்கள் பண்ற அட்டகாசம் சகிக்க முடியலங்க. அந்தக் கடையை எப்படியாவது மூடணும்!’’

இளைஞர்கள் இந்தக் கோரிக்கையோடு வந்திருக்கீங்க... அதுக்காக முதல்ல உங்களுக்கு என் பாராட்டு... என்ன படிச்சிருக்கீங்க?’’ ரெண்டு பேரும் சயின்ஸ் கிராஜுவேட்ஸ்... வேலை தேடிட்டிருக்கோம்...’’ நல்லது... சன்னதித் தெருவில் நிச்சயம் கோவில் இருக்கும்... அங்கே பள்ளிக்கூடம் ஏதாவது இருக்கா?’’

பள்ளிக்கூடம் இல்லீங்கய்யா... ஆனா, டியூஷன் சென்டர் ரெண்டு இருக்கு... அங்கேயும் நூற்றுக்கணக்கில் பிள்ளைகள் படிக்கிறாங்க... அதுமாதிரி நாலஞ்சி நர்ஸிங்ஹோமும் இருக்கு!’’ என்றான் இளநகை. சரி தம்பிகளா, நான் ஒரு மனு எழுதித் தர்றேன்... அதுல நாலஞ்சி காப்பி எடுத்து தெருவாசிகள் எல்லார்கிட்டேயும் கையெழுத்துவாங்கி தாசில்தார், கலெக்டர், அமைச்சர், சி.எம் ஸெல் எல்லாத்துக்கும் அனுப்புவோம்... இது முதல்படி.

அப்புறம் என்ன செய்யணும்னு நான் சொல்றேன்... இப்ப நான் அவசரமாப் போகணும்... பக்கத்து கிராமத்துல சுடுகாடு தனியே வேணும்னு தலித்துகள் போராட்டம்... நீங்க சாயங்காலம் ஆறு மணிக்கு வந்து என்னைப் பாருங்க!’’ ``சரிங்கய்யா, அப்ப நாங்க புறப்படறோம்’’ இருவரும் கிளம்பினார்கள். திருச்சி - திண்டுக்கல் சாலையில் புதிதாக நிறுவப்பட்டிருந்த கல் குவாரியில் பணிமுடிந்து ஊழியர்கள் புறப்பட்டார்கள். அதில் ஆர்த்தியும் ஒருத்தி.

பி.காம் பட்டாரியான அவளுக்கு இங்கே அலுவலகத்தில் கணக்காளராய்ப் பணி. ஆர்த்தி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனாலும், தன் காலில் நிற்கவேண்டும் என்ற கொள்கை உள்ளவள். அவளுக்கு இந்தப் பணி பிடித்திருந்தது. திருச்சியில் தன் தோழி பவித்ராவுடன் தனியாக வீடு பிடித்துத் தங்கியிருந்தாள். பவித்ரா ஒரு பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளர்.

குவாரியிலிருந்து பிரதான சாலைக்கு வர செம்மண் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்கவேண்டும். சாலையின் இருமருங்கிலும் கருவேல மரங்கள் ஒழுங்கின்றி மண்டிக் கிடக்கும். ஒருகாலத்தில் அங்கே விளைநிலம் இருந்ததற்கு சாட்சியாய் காய்ந்து கிடந்த வாய்க்கால். அதை ஒட்டிய மதகுகள்.

இருட்டிய பிறகு அந்தச் சாலையில் தனியே வரவேண்டாம் என்று ஆர்த்தியை எச்சரித்து வைத்திருந்தாள் பவித்ரா. மதகுக்கட்டையில் லுங்கியுடன் உட்கார்ந்திருக்கும் இளைஞர்கள் மூவர் ஆர்த்தியைப் பணிமுடிந்து திரும்புகையில் கிண்டல் செய்வது மூன்று நாட்களாய்த் தொடர்ந்தது. வடக்கிலிருந்து பிழைப்புக்காக இங்கே வந்தவர்களின் கொழுப்பு. ஆர்த்தி அமைதி காத்தாள்.

கிண்டல் தொடர்ந்தால் அவர்களை விடக்கூடாது என்கிற எண்ணமும் உடன் வரும். கல்லூரியில் படிக்கையில் தற்காப்புக்காக கராத்தேயும் பயின்றிருந்தாள். அவர்கள் உழைப்பது, கிடைக்கிற கூலியில் போதையேற்றிக் கொண்டு ஜாலியாய் இருப்பது என்கிற ரகம். அவர்களுக்குப் பக்கத்தில் காலியான பீர் பாட்டில்கள் கிடப்பதை இவள் பார்த்திருக்கிறாள். இவள் அவர்களைக் கடக்கிறபோது இந்தியில் எதையாவது சொல்லிவிட்டுச் சிரிப்பார்கள்.

ஆர்த்திக்கு இந்தி அவ்வளவாகத் தெரியாது என்றாலும் அவர்கள் தன்னை அசிங்கமாக வர்ணிக்கிறார்கள் என்பது புரிந்தது. தான் கொண்டுவருகிற பேக்கில் தற்காப்புக்காக ஆப்பிள் வெட்டும் கத்தியையும் எடுத்து வருகிறாள். சந்தர்ப்பம் பார்த்து அதைப் பயன்படுத்தும் முடிவிலிருந்தாள். இன்றும் அவர்கள் உட்கார்ந்திருந்ததைக் கவனித்தாள். அவர்களைக் கடந்தபோது ஒருவன் பீர் பாட்டிலோடு இவளது உடலமைப்பை ஒப்பிட்டு என்னவோ சொல்ல, மற்ற இருவரும் சிரித்தார்கள்.

ஆர்த்தி நின்றாள். திரும்பி அவர்களை முறைத்தாள். அவர்கள் பயந்து எழுந்து நின்றார்கள். ஒருவன் மட்டும், ``ஸாரி சிஸ்டர்!’’ என்றான். ``இந்தமாதிரி வம்பு பண்ணுனீங்கன்னா போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணிடுவேன்!’’ எச்சரித்துவிட்டு நடந்தாள். இவள் திரும்பியதும் ஒருவன் அசிங்கமாய்ச் செய்கை செய்தான். அன்று மாலை சரியாக ஆறுமணிக்கு வாசுவும், இளநகையும் ஆத்மநாதனின் வீட்டுக்கு வந்தார்கள்.

சொன்னபடி சரியா ஆறுமணிக்கு வந்திட்டீங்க... உங்களோட நேரம் தவறாமை எனக்குப் பிடிச்சிருக்கு. மனு எழுதிட்டேன்’’ என்றவர் தன் ஃபைல் பேடில் இருந்த தாளை எடுத்துக் கொடுத்தார். வாசு வாங்கிக் கொண்டான். இளநகை, ``நன்றிங்கய்யா’’ என்றான். ``நன்றி எதுக்கு தம்பி... இதைக் கொஞ்சம் முன்கூட்டியே சொல்லி இருந்தீங்கன்னா கடையையே திறக்கவிடாம செய்திருக்கலாம்!’’

கவுன்சிலர் நாகராஜன்தான் ரொம்ப ரகசியமா இந்தக் காரியத்தைச் செய்து முடிச்சிருக்காரு. தெருவில் யாருக்குமே இந்தவிஷயம் தெரியாதுங்கய்யா!’’ ``பினாமி பேர்ல அவன் ஆரம்பிச்சிருக்கான்னு கேள்விப்பட்டேன். எதுக்கும் எச்சரிக்கையா இருக்கணும் தம்பி.. ஏன்னா நாகராஜன் கொலைக்கும் அஞ்சாதவன்..!’’

சரிங்கய்யா, நாங்க கிளம்புறோம்... மனுவை டைப் பண்ணி தெருவாசிகள்கிட்ட கையெழுத்து வாங்கின பிறகு உங்கள்ட்ட காட்டிட்டு அனுப்பறோம்!’’ ``பத்திரமாப் போய்ட்டு வாங்க.’’ வாசு ஏறிக் கொண்டதும் இளநகை மொபெட்டைச் செலுத்தினான். நல்ல மனுசன்டா. இவர்மாதிரி ஊருக்கு ஒருத்தர் இருந்தா நாடு உருப்படும்!’’ இவர்கள் பேசிக் கொண்டே வடக்குத் தெரு திரும்பியபோது எதிரில் ஒரு கார் மோதுவது போல வந்து பிரேக் அடித்து நின்றது.

எவன்டா மடத்தனமா கார் ஓட்றது’’ என்று வாசு உச்சத்தொனியில் கத்தியவன் காரிலிருந்து இறங்குபவரைப் பார்த்துவிட்டு நிறுத்தினான். நாகராஜன் பந்தாவாய் இறங்கிவந்தார். ``என்னா, தம்பிகளா... படிச்சிருக்கீங்க... வேலை கிடைக்கலைன்னா சொல்லுங்க, நம்ம பார்லயே ஒரு வேலை போட்டுத் தர்றேன்... ஏன் வேண்டாத வேலையெல்லாம் செய்றீங்க?’’ கேட்டுக்கொண்டே வாசுவின் சட்டைப்பைக்குள் கைவிட்டு ஆத்மநாதன் எழுதிக்கொடுத்த மனுவை எடுத்துக் கிழித்து வீசினார்!

குடும்பங்கள் வாழும் தெரு நடுவுல ஒயின்ஷாப் நடத்துறீங்களே, அது நியாயமா?’’ கோபமாய்ப் பேசிய இளநகையை வாசு தடுத்தான். வாசு, தம்பிக்கு இளரத்தம் பொங்குது... கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லு!’’அடுத்தநாள் மாலை. சம்பளநாள் என்பதால் ஆர்த்தி பணிமுடிந்து கிளம்பியபோது நன்றாகவே இருட்டிவிட்டது. இனம்புரியாத பயம் மனசைக் கவ்விக் கொண்டது.

மதகுகளில் நல்லவேளையாய் அந்த இளைஞர்களைக் காணவில்லை. தைரியமாய் நடந்தபோது பின்னாலிருந்து ஒருவன் தோன்றினான். ஆர்த்தி கவனிக்கவில்லை. வந்தவன் சட்டென்று ஆர்த்தியின் இரண்டு கைகளையும் பற்றியிழுத்துப் பின்னால் வைத்து முறுக்கினான். ஆர்த்தி வலி தாங்காமல், ``அம்மாஆஆ!’’ என்று அலறினாள்.

தொடந்து அவள் கத்தாமல் முன்னால் தோன்றிய இன்னொருவன் அவள் முகத்தில் கைக்குட்டையை வைத்து அழுத்தினான். அதில் தெளிக்கப் பட்டிருந்த மருந்து ஆர்த்தியைச் சில நொடிகளிலேயே மயக்கப்படுத்தி விட்டது. எதிர்க்கும் சக்தியிழந்தவளை நிறை போதையிலிருந்த மூவருமாய் இருண்டிருந்த கருவேலங்காட்டுக்குள் தூக்கிச் சென்றார்கள்.

இரவுமணி பத்துக்கு மேலிருக்கும். நாகராஜன் வீட்டுத் தொலைபேசி மணி ஒலித்தது. தொலைக்காட்சி சீரியலில் ஆழ்ந்திருந்த நாகராஜின் மனைவி கண்ணம்மா, `இந்தநேரத்துல யாராயிருக்கும்?’ என்ற யோசனையுடன் ரிஸீவரை காதில் பொருத்தி, ``ஹல்லோ, யாருங்க... அவரு இன்னும் கடையிலிருந்து வரலை!’’ என்றாள்.

``அம்மா, நான் ஆர்த்தியோட ரூம்ல தங்கியிருக்கிற பவித்ரா பேசுறேம்மா...’’ ``சொல்லும்மா... ஆர்த்தி நல்லாயிருக்காளா?’’ அவளைப் பற்றிச் சொல்லத்தாம்மா கூப்பிட்டேன். காலையில் வேலைக்குப் போனவ இன்னும் அறைக்குத் திரும்பலை. அவளோட மொபைலும் ஆஃப் ஆகியிருக்கு. குவாரிக்கு ஃபோன் பண்ணினேன். அங்கிருந்து கிளம்பிட்டதாச் சொல்றாங்க.. எனக்கு   பயமா  இருக்கும்மா...’’  

சாப்பிட்டால் ஃபைன்!

இங்கிலாந்து ட்ரைவர் ஒருவர் அல்பான்ஸ் நகரருகில் லன்ச்சுக்காக கிரேனை நிறுத்தினார். டீசல் டேங்கில் வைத்து சாலட் சாப்பிட வாய் திறந்தபோது, ஹைவே போலீஸ் ஆஜராகி, ‘லன்ச்? அதுவும் இந்த இடத்திலா?’ என ஃபைன் விதித்து சாலட்டை சீஸ் செய்துவிட்டது. சோறு தின்னா குத்தமா?

வேம்பு பீர்

டெல்லி யுனிவர்சிட்டியில்தான் இந்த கூத்து. அங்குள்ள வேம்பில் பீச்சியடிக்கும் கள் போன்ற இலவச வெண் திரவத்தை பருக கி.மீ நீள க்யூ. டெய்லி 10 லிட்டர் வருதாம்!

ஷூவில் வைரங்கள்!

‘அயன்’ படமேதான். ஹாங்காங்கின் ஷென்ஸென் நகரிலுள்ள லுவோஹூ ஏர்போர்ட்டில் இளைஞர் ஒருவர் நுனிக்காலில் நடக்க, உடனே செக் செய்த போலீஸ், ஷூவிலிருந்த ஆயிரம் வைரங்களை மடக்கியது. காலம் மாறினாலும் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ பாணி மாறுவதில்லை!