jokes



‘‘என்னது... இந்த மாத்திரையை வைஃபை ஏரியாவுலதான் சாப்பிடணுமா?’’
‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை!’’
- எஸ்.ராமன், சென்னை - 17.

‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகலைனு எப்படிச் சொல்ற?’’
‘‘பின்னே... ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு சொல்றாரே!’’
- பாலா சரவணன், சென்னை.

‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும் ரிடையர்மென்ட் கொடுக்கலை?’’
‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்... அதான்..!’’
- பா.மனோகரன், சென்னை - 54.

‘‘‘இடை’த்தேர்தல்ல யாரோட கூட்டணி தலைவரே..?’’
‘‘எதிர்க்கட்சி மகளிர் அணி தலைவியோடதான்!’’
- எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..?’’
‘‘அவங்களோட சண்டை போடக் கூட டூப்பைத்தான் அனுப்புறாராம்!’’
- வி.சாரதிடேச்சு, சென்னை - 5.

‘‘என்னது... ஜெயில்ல நம்ம தலைவர் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தறாரா..?’’
‘‘ஆமா... நாளைக்கு ரிலீசாகிற கைதிகளை கட்சிக்கு நிர்வாகியா தேர்ந்தெடுத்துட்டு இருக்காரு!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

‘‘நீ சரோஜாதேவி ரசிகரா இருக்கலாம்... அதுக்காக நம்ம தலைவிக்கு ஃப்ளக்ஸ் பேனர்ல ‘கன்னடத்து கூண்டுக்கிளியே’னா பட்டம் கொடுக்கறது?!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு - 9.

‘‘என்ன டாக்டர்... ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க... ஆனா, பேஷன்ட் இறந்துட்டாரே..?’’
‘‘ஏப்ரல் ஃபூல்!’’
- எஸ்.எலிசபெத் ராணி, பழைய விளாங்குடி.