தடுப்பூசி பிரச்னை - சர்ச்சைகள்



-திலீபன் புகழ்

தடுப்பூசி குறித்து வாட்ஸ்அப்பில் வலம் வரும் சர்ச்சைகள்தான் இப்போது லேட்டஸ்ட் வைரல். தமிழகம் முழுதும் எம்.ஆர் தடுப்பூசி முகாம் நடத்திவருகிறது தமிழக அரசு. இந்த முகாமை மாநில அரசு அறிவித்ததுமே தடுப்பூசிக்கு எதிரான குரல்கள் வலம் வரத் தொடங்கிவிட்டன.

தடுப்பு மருந்துகள் என்பவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான தற்காப்பு நடவடிக்கை என்பதில் இருந்து பணம் கொழிக்கும் வணிகமாக மாறிவிட்டது என்பதுதான் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு. சுமார் இரண்டு கோடி குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிட்டு நடக்கும் இந்தக் கருத்து யுத்தம் சரியானதா? தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் அவசியமா? இல்லையா? 

‘ஆரோக்கியமான உணவு, நல்ல சூழல், பாதுகாப்பான வாழ்வு இருந்தாலே எந்தத் தடுப்பூசியும் குழந்தைகளுக்குத் தேவை இல்லை’ என ஒரே குரலாக ஒலிக்கிறார்கள் தடுப்பூசிக்கு எதிராகப் பேசும் மருத்துவர்கள். ‘1990களுக்கு முன்பு, இந்தியத் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் சத்தான உணவு, ஆரோக்கியச் சூழல் என்பது இல்லவே இல்லை.

அவ்வளவு வறுமை நிலவிய காலகட்டம் அது. இப்போதும் ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்தசோகை என்பவை நம் நாட்டின் பெரிய சவால்கள்தான் என்றாலும், பசுமைப் புரட்சிக்குப் பிறகு உணவு பற்றாக்குறை ஓரளவுக்கு சமாளிக்கும் நிலையைத் தொட்டுவிட்டது. எனவே, அதன் பிறகு தடுப்பூசி என்பது தேவை இல்லாதது. நமது உடலே நமக்குத் தேவையான தடுப்பாற்றலை உற்பத்தி செய்துகொள்ளும்’ என்கிறார்கள் தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகளுக்கு எதிராகப் பேசும் மருத்துவர்கள்.

இவர்கள் முன்வைக்கும் வாதங்கள் இவைதான்:
 
1853ல் இங்கிலாந்தில் அம்மைத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் இணைந்து உலகத் தடுப்பூசி எதிர்ப்புச் சங்கத்தை ஆரம்பித்தனர்.
 
1880ல் பாரீஸில் நடைபெற்ற தடுப்பூசி எதிர்ப்பு மாநாட்டில் இங்கிலாந்தில் தடுப்பூசிகளால் ஏற்பட்ட விளைவுகளை ஆராய்ந்தனர். இதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் அடுத்த ஆண்டே ராயல் கமிஷன் அமைக்கப்பட்டது. 1896ல் ராயல் கமிஷன் கட்டாயத் தடுப்பூசிச் சட்டத்தைக் கைவிடப் பரிந்துரைத்தது. அதன்படி கட்டாய தடுப்பூசித் திட்டம் கைவிடப்பட்டது. 
 
1989ல் அமெரிக்க பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் அம்மைத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட பிறகு அரசின் நோய்த் தடுப்பு மையம் (Center for Disease Control) நடத்திய ஆய்வில், அமெரிக்கக் குழந்தைகளில் 98% பேருக்கு அம்மை நோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது, ஊசி போடுவதற்கு முன்பிருந்த அளவைவிட மிக அதிகம்.
 
அமெரிக்காவில் 1990களில் மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருந்தது. பின்னர், தடுப்பூசிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளில் இவற்றைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு 13 விதமான நோய்கள் வருவதாக அறிந்து 1997ல் கட்டாயத் தடுப்பூசிச் சட்டம் நீக்கப்பட்டது.
 
2002ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட பிறகு 26 குழந்தைகளுக்கு போலியோ ஏற்பட்டது. உலக சுகாதார மையம் ஆராய்ந்தபோது, 16 வகை நச்சுக் கலப்படங்கள் அந்த சொட்டு மருந்தில் இருப்பதைக் கண்டறிந்தது.
 
2008 மே மாதம் தமிழகத்தில் 10 குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதால் இறந்தனர். இதனைத் தொடர்ந்தே ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் தடுப்பு மருந்துகளின் பக்கம் திரும்பியது. இந்த சம்பவத்தை ஆராய மத்திய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தியத் தடுப்பு மருந்து பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப் புலியேல் தலைமையில் இயங்கிய அக்குழு, மருந்துகள் வைக்கப்பட்டிருந்த இடம், பராமரிப்பு ஏற்பாடுகள், சொட்டு மருந்துகள் வழங்கப்பட்ட முறை என் அனைத்தையும் விசாரித்தபின், ‘நடைமுறையில் தவறு ஏதும் இல்லை, மருந்துகளைத்தான் பரிசோதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.
 
போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்த சாப்பின், பின்னர், இந்த மருந்தால் பெரும் அளவு பலன் ஏதும் இல்லை என ஆராய்ந்து கூறியிருக்கிறார்.
 
‘தேவையற்ற தடுப்பூசிகள் போடுவதை நிறுத்துங்கள்’ என 2014ம் ஆண்டு இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் குழு ஒன்று பிரதமருக்கு கடிதம் எழுதியது. அதில், தமிழகம் உட்பட எல்லா மாநிலங்களிலும் பரவலாகப் போடப்படும் தடுப்பூசிகளால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை ஆதாரபூர்வமாகக் குறிப்பிட்டிருந்தனர்.
 
ஹெபடைட்டிஸ் பி (Hepatitis B vaccine) எனும் பென்டாவேலன்ட் (Pentavelant) தடுப்பூசியால் குழந்தைகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை மருத்துவர் ஜேகோன் புலியேல் குழுவில் இருந்த தலைசிறந்த மருத்துவர்கள் அறிக்கையுடன் சமர்ப்பித்தனர்.
 
அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ஆங்கில மருத்துவர்கள் தடுப்பூசியை எதிர்க்கிறார்கள். டாக்டர் வில்லியம் ட்ரெப்பிங், அமெரிக்காவின் கட்டாயத் தடுப்பூசிச்சட்டம் நடைமுறையில் இருந்தபோது, ‘கிருமிக் கோட்பாட்டுக்கு விடைகொடுப்போம்‘ (Good bye germ theory) என்னும் தடுப்பூசி ஆய்வு நூலை எழுதி பெரும் அதிர்வை ஏற்படுத்தினார்.
 
உலக அளவில் போலியோ பாதிப்பு 1954ல் எட்டு மில்லியனாக இருந்தது. 1956ல் 10 மில்லியனாக உயர்ந்தது. அந்த ஆண்டு தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. ஓரிரு வருடங்களில் போலியோ முற்றிலும் அழிந்ததாக அறிவிக்கப்படுகிறது. ஆனால், 1960ல் மீண்டும் போலியோவின் தாக்கம் தொடங்குகிறது. இப்படி, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னும் நோய்கள் மீண்டும் மீண்டும் வருவதை 150 ஆண்டு காலச் சுகாதார வரைபடம் தெளிவாக விளக்குகிறது. 
 
‘தடுப்பூசி மருந்துகளின் டார்கெட் குழந்தைகள்தான். எல்லோரும் அந்தக் கம்பெனிகளுக்கு வாழ்நாள் கஸ்டமர்கள்’ என்கிறார் டாக்டர் ஷெர்ரி டென்பென்னி என்னும் பெண் மருத்துவர். இவர், தடுப்பூசிகளால் அமெரிக்க குழந்தைகளுக்கு ஆட்டிஸம் குறைபாடு ஏற்படுகிறது என்று, ‘தடுப்பூசியை மறுப்போம்’ (Saying No to Vaccines) என்ற நூலில் எழுதியுள்ளார்.
 
‘பெரியம்மைக்குத் தடுப்பூசி கொடுப்பதால், ரத்தப் புற்றுநோய் ஏற்படுகிறது. இதை என் அனுபவத்தில் கண்டுள்ளேன்’ என்கிறார் போலந்து நாட்டு மருத்துவப் பேராசிரியரான ஜூலியன் அலெக்சாண்டரோவிக்ஸ்.
 
தடுப்பூசிகளால் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் இறந்து போனவர்களுக்காக அமெரிக்காவில் தனி நீதிமன்றம் இயங்குகிறது. தேசிய தடுப்பூசி இழப்பீட்டுத் திட்டம் (The National Vaccine Injury Compensation Program) என தனிச் சட்டத்தை அந்நாடு இயற்றியுள்ளது. தடுப்பூசியால் ஆட்டிஸம், மன இறுக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது என அமெரிக்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது. 
 
2009ம் ஆண்டில் சீனாவில் இருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக் காய்ச்சல்) பரவுவதாகக் கூறப்பட்டது. சீனாவில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். சார்ஸ் சளிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், ஓரிரு மாதங்களில் தானாகவே குறைந்த அந்தக் காய்ச்சல் படிப்படியாக மறைந்தே போனது.

அதேபோல, இந்தியாவில் சிக்குன் குனியா நோயும் மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே காணாமல்போனது. எந்த ஒரு நோயில் இருந்தும் காப்பதற்கான எதிர் புரதங்களை, தற்காப்புகளை உடலே உருவாக்கிக் கொள்ளும். இயற்கையாய் தோன்றும் எல்லா நோய்களையும் இயற்கையே பார்த்துக்கொள்ளும்.