jokes



‘‘உன்னோட கடைசி ஆசை என்ன பெருசு?’’
‘‘வேண்டாம் நர்ஸ்...
உங்களால அதை நிறைவேற்ற முடியாது!’’
- வி.ரேவதி, தஞ்சை.

‘‘உனக்கு சொர்க்கம் வேணுமா நரகம் வேணுமா?’’
‘‘ரிசார்ட் போதும் சாமி!’’
- எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

‘‘எதுக்காக தலைவர் திடீர்னு புதுசா ஊழல் பண்ணறார்..?’’
‘‘எதிர்க்கட்சித் தலைவர் ஆறு குற்றப்பத்திரிகை வாங்கியிருக்காராம். இவரு அஞ்சுதான்.
அதை ஈடுகட்டத்தான் இப்படி செய்யறாரு!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

‘‘சார்... ஆமை வடை, மெது வடை... எது வேணும்?’’
‘‘Peta கேஸ் போடுவாங்க... நீ மெதுவடையே கொண்டு வா!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு - 9.

‘‘தலைவரே... உங்களை ‘எட்டப்பன்’, ‘துரோகி’, ‘ஒடுகாலி’னு எதிர்க்கட்சிக்காரங்க திட்டறாங்க...’’
‘‘விடுப்பா... அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்!’’
- பாலா சரவணன், சென்னை - 128.

‘‘அதான் சுழற்சிமுறைல முதல்வராகலாம்னு முடிவு செய்துட்டாங்களே... அப்புறம் ஆளுங்கட்சிக்குள்ள என்ன குழப்பம்..?’’
‘‘முதல்ல யார் முதல்வர்னு முக்கியமில்லையாம்... கடைசில யார் முதல்வர் என்பதற்குதான் இந்த அடிதடி!’’
- கி.ரவிக்குமார்,
நெய்வேலி - 803.

‘‘கோர்ட் வரைக்கும் போயிட்டு வரேன்...’’
‘‘போறீங்க சரி... திரும்ப வருவீங்களா தலைவரே!’’
- அஜித், சென்னை - 126.

‘‘தலைவர் இன்னும் ஜெயில் நினைவாவே இருக்கார்னு எப்படி சொல்ற?’’
‘‘வீட்ல சாப்பிடும்போதும் ஜன்னல் கம்பி பக்கமா உட்கார்ந்துதானே சாப்பிடறார்!’’
- எஸ்.கோபாலன், சென்னை - 61.