கார்ப்பரேட் சாமியார் - கலர் சைக்காலஜி-ஷாலினி நியூட்டன்

கார்ப்பரேட் சாமியார்களின் இருப்பிடங்களும், யோகா மையங்களும் பொதுவாக ஒரு சில வண்ணங்களைக் கொண்டிருக்கின்றன. இதன் பின்னால் இருக்கும் உளவியல் என்ன? எந்த குணநலன்களை இவை உணர்த்துகின்றன?

வெண்மை: தூய்மை, உண்மை, தெளிவு, அமைதி, புத்துணர்ச்சி, நம்பிக்கை. 
பிங்க்: கவர்ச்சி, பெண்மை, காதல், அன்பு.
காவி (ஆரஞ்ச்): பக்தி, பாதுகாப்பு, பிடிமானம், அரவணைப்பு.
வயலட்: தொலைநோக்குப் பார்வை, தரமான சிந்தனைகள். 
கருப்பு: மனதளவில் பாதுகாப்பு, உள்ளார்ந்த கவர்ச்சி, மறைமுக ஈர்ப்பு. 

எல்லா சாமியார்களும் ஒரே வண்ணத்தைப் பயன்படுத்துவதில்லை. ஆனால், அனைவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அது, எல்லா ஆசிரமங்
களும் மரங்கள் சூழ இருப்பது. நடுநிலைமை, குளிர்ச்சி, இதமான உணர்வு ஆகியவற்றை பச்சை வண்ணம் கொடுக்கும் என்பதை மனதில் கொள்வது நல்லது.