ஓஷோ
கார்ப்பரேட் சாமியார்
-தொகுப்பு: திலீபன் புகழ்
* இயற்பெயர்: ரஜனீஷ் சந்திர மோகன்.
* அமெரிக்காவில் ‘ரஜனீஷ்புரம்’ என்ற ஆசிரமம் தொடங்கி, குடியிருப்பு, சாலை வசதி, மருத்துவமனைகள் என ஆரம்பித்தார். ஒரு விமான நிலையம் கூட இவருக்கு இருந்தது.
* 1986 ஜூலை 29ந் தேதி பம்பாய்க்கு திரும்பி வந்தார்.
* எம்.ஏ தத்துவவியலில் தங்கப் பதக்கம் பெற்று சில காலம் தத்துவ பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1970 ஜூலையில் மும்பைக்கு வந்தவர், 1974 வரை அங்கேயே வசித்தார். இந்த கால கட்டத்தில் பகவான் ஸ்ரீரஜனீஷ் என்று அழைக்கப்பட்டு சிஷ்யர்களுக்கு தீட்சை வழங்கினார்.
* ஆசிரமத்தில் ஊழலும், விசாவில் மோசடியும் இருப்பதாக இவரை கைது செய்து வலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றியது அமெரிக்க அரசு. 21 நாடுகள் இவரை உள்ளே வர அனுமதிக்கவில்லை.
* 1990-ம் ஆண்டு ஜனவரி 19 மாலை 5 மணிக்கு மரணமடைந்தார்.
* மத்தியப் பிரதேசத்தில் உள்ள குச்வாடா கிராமத்தில் 1931ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ம் தேதி பிறந்தார்.
* இவரது மௌனமும், அசையாதிருத்தலும் என்ற செய்முறை தியானம் மிகவும் முக்கியமானது. இந்த தியானத்தை இப்போதும் உலகிலுள்ள பல டாக்டர்கள், ஆசிரியர்கள், தொழில்முறை பயிற்சியாளர்கள், மனோதத்துவ வல்லுனர்கள் கடைப் பிடித்து வருகிறார்கள்.
பாபா ராம்தேவ்
* இயற்பெயர்: ராம்கிஷான் யாதவ்.
* எட்டாவது வரை மட்டுமே படித்திருக்கிறார்.
* இவர் நடத்தும் ஆசிரமத்தில் உள்ள தொழிலாளர் பிரச்னை குறித்து இப்போதும் அரியானாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
* சினிமா, அரசியல் பிரபலங்களுடன் இணைந்து யோகா செய்வது இவரது ஸ்பெஷல்.
* பல அரசியல் சர்ச்சைகளில் இவர் பெயர் அடிபட்டு வருகிறது.
* அரியானாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 1965ல் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.
* யோகா வகுப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம்தான் மக்களின் மத்தியில் அறிமுகமானார்.
* ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு தீவை இவருக்கு ஆங்கிலேய தம்பதியர் பரிசளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்தத் தீவு அன்பளிப்பாகத்தான் வழங்கப்பட்டதா அல்லது வாங்கப்பட்டதா என்ற விவரத்தையும், லிட்டில் கும்ரே தீவில் செயல்படும் ராம்தேவின் சுகாதார மையம் குறித்த தகவலையும் இங்கிலாந்து அதிகாரிகளிடம் இந்திய அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
* ஆதிசங்கரர் பிறந்த நாளில் பிறந்ததால் இவருக்கு சங்கர் என பெயர் வைத்தனர் .
* தனது சுதர்சன் கிரியா பயிற்சிக்கு தனியாக காப்புரிமை பெற்றுள்ளார். பழைய யோகா பயிற்சிகளை மூச்சுப் பயிற்சிகளுடன் இணைத்து வணிகமாக்கியிருக்கிறார் என சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
* ஆசிரமத்துக்கு வணிகப் பலன் வேண்டியே தன்னார்வலர்களுடன் இணைந்து சமூக மாநாடுகளை நடத்துவதாக விமர்சனம் உண்டு.
* அமெரிக்க வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நிகழ்ந்த பிறகு, இவரது நிறுவனம் அங்கு இலவசமாக மன உளைச்சலைக் குறைக்கும் பயிற்சியில் ஈடுபட்டது.
* தமிழகத்திலுள்ள பாபாநாசத்தில் மே 13, 1956ல் வேங்கடரத்னம் - விசாலாட்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
* நான்கு வயதிலேயே பகவத் கீதையை ஒப்புவித்து அனைவரையும் திகைக்க வைத்தார்.
* சிறைக் கைதிகளுக்குக் கூட வாழும் கலை சார்ந்த பயிற்சிகளை இவரது நிறுவனம் அளித்து வருகிறது.
* இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.
ஜக்கி வாசுதேவ்
* இயற்பெயர்: கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி.
* சுசீலா-வாசுதேவ் தம்பதியினருக்கு நான்காவது மகனாகப் பிறந்த இவருக்கு ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் உண்டு.
* படிப்பு- இளங்கலை ஆங்கிலம்.
* செப்டம்பர் 3, 1957ல் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூரில் பிறந்தார்.
* 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை ப்ரூக் பாண்ட் ரோடு மேம்பாலத்தின் கீழ், குதிரை வண்டி நிறுத்துமிடத்தில், இவர் கஞ்சா வியாபாரம் செய்ததாக சொல்கிறார்கள்.
* மகளுக்கு திருமணம் செய்து வைத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
* தனது மனைவியை இவரே கொலை செய்து விட்டார் என்ற வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
* கோவையில் நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர் இவரது உள்ளடி வேலைகளைப் பற்றி கேட்டுள்ளார். கோபமடைந்த ஜக்கி அவரைத் தாக்கியுள்ளார். அதுபற்றிய புகாரை அப்போதைய கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு, ‘சம்பந்தப்பட்டவர்மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறி வழக்கை பதிவு செய்தார். நகலின் பதிவு எண்: 433/1808.
மாதா அமிர்தானந்தமயி
* இயற் பெயர் சுதாமணி.
* மூன்றாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.
* ஆசிரமத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல்களை பலர் புத்தகங்களாக எழுதி வெளியிட்டுள்ளனர்.
* சீடர்கள் பலர் ஆசிரமத்தில் இருந்து அடிக்கடி வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள்.
* இவரைப் பற்றி நிறைய ஆவணப்படங்கள் வெளியாகியுள்ளன.
* இவரைப் பற்றி நிறைய ஆவணப்படங்கள் வெளியாகியுள்ளன.
* சர்வதேச அளவில் ஆன்மிக சேவைக்காக காந்தி கிங் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
* கட்டி அரவணைத்து ஆறுதல் கூறி சக்தி தருவதுதான் இவரது ஆன்மிக அணுகுமுறை.
* இன்று அம்மா என்று பக்தர்களால் உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.
|