HOBBIES BABIES



-மை.பாரதிராஜா

* சினிமாதான் நமக்கு பிடிச்ச ஹாபி! சரி. அங்கே அசத்தும் நம்ம பேபிஸுக்கு எது ஹாபி..?

* டோலிவுட் ஹிட் ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங், கோல்ஃப் விளையாட்டில் நேஷனல் சாம்பியன். ஜிம் ஒர்க் அவுட் செய்துவிட்டு இன்றும் விடாமல் கோஃல்ப் ஆடுகிறார்.

* வீட்டில் இருந்தால் செல்ல நாய்க்குட்டி (அவங்களுக்கு மட்டுமே அது குட்டி!) eddyயை கொஞ்சுவதுதான் ப்ரணிதாவின் பாலிஸி. ஸ்கூபா டைவிங் போன்ற வாட்டர் சாகஸங்களில் அவ்வப்போது ஸ்கோர் செய்வதும் உண்டு.

* இயற்கை ஆர்வலர் ஸ்ரீதிவ்யாவுக்கு செடி, கொடிகள் என்றால் செம இஷ்டம். அவரது ஹைதராபாத் வீட்டு பால்கனி முழுவதும் பூந்தொட்டிகள் பூத்துக் குலுங்குகின்றன.

* பூனம் பஜ்வா ஒரு புத்தகப் பிரியை. வீட்டில் ஆயிரக்கணக்கில் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார். அத்தனையும் ஏர்போர்ட்களில் உள்ள ஸ்டால்களில் வாங்கிக் குவித்தவையாம்.

* சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் டூர் அண்ட் ட்ராவல் தகவல் களஞ்சியமாக இருந்திருப்பார் ராய் லட்சுமி.  கண்கவர் தீவுகள்... சிலுசிலுக்கும் கடற்கரை... என ரிலாக்ஸ் ட்ரிப் அடித்து வரும் ராய், ‘nature brings joy in me’ என்கிறார்.

* ஸ்ருதி ஒரு இசைப்பறவை. கார் டிரைவிங் ரொம்ப பிடிக்கும். அதுவும் மும்பையில் உள்ள தன் சிகப்புகலர் லேண்ட் க்ரூஸரில் டிரைவ் செய்ய அவ்வளவு பிடிக்குமாம்.

* லண்டனில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களுக்கு தன் பெற்றோரை அழைத்துச் சென்று சர்ப்ரைஸ் ட்ரீட் வைப்பது எமி ஜாக்சனுக்கு பிடித்த விஷயம். ஷாப்பிங் அண்ட் எக்ஸர்சைஸ் பிற ஹாபிஸ்.

* ஹன்சிகா ஓவியம் வரைவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். லேட்டஸ்ட்டாக இவருக்கு யோகாவில் ஆர்வம் பொங்கி வழிகிறது!

* ஜிம்மில் வாசம் செய்யும் லட்சுமி மேனன், டூவீலர் ரைடிங்கில் ஆர்வமுள்ளவர். ‘மிதவேகம் மிக நன்று’ என்கிறார்.

* வாட்டர் ஸ்போர்ட்ஸில் ஆர்வம் அதிகம். Sea foods சமைக்க பிடிக்கும். மொபைல் கேமிராவில் விதவிதமாக ஷூட் பண்ணுவது லேட்டஸ்ட் ஹாபி என அமலாபாலைப் பற்றி சொல்ல நிறைய உண்டு.

* வண்ணங்களையும், தூரிகையையும் பார்த்தால் போதும் பரவசமாகிவிடுவார் பார்வதி நாயர். வாட்டர்கலர் பெயின்டிங்ஸ், பென்சில் ஓவியங்கள் என மினி கலெக்‌ஷனே வரைந்து வைத்திருக்கிறார்.

* ஸ்டெல்லா மேரீஸில் படித்ததாலோ என்னவோ... ஆங்கில நாவல்களை விரும்பிப் படிப்பது சமந்தாவின் பழக்கம். சமீபத்தில் ‘Rise of ISIS’ புத்தகத்தை படித்துவிட்டு ‘All we can do is try to love in the face of such hate. And for those who can do something about this Tic toc’ என உடனடியாக பதிவும் செய்திருக்கிறார்.

* பெங்களூர் வீட்டில் அவ்வப்போது நாய்க்குட்டி ‘ஜூனியரை’க் கொஞ்சிக் கொண்டிருந்த நிக்கி கல்ராணி, இப்போது சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். முதன்முறையாக சிக்கன் குழம்பு செய்து அப்ளாஸ் அள்ளியிருக்கிறார்!

* டாப்ஸி ஒரு ட்ராவலிங் பறவை. தங்கை ஷாகனுடன் இணைந்து ‘வெட்டிங் ஃபேக்டரி’ நிறுவனத்தை நடத்தி வரும் அவர், இப்போது கடலுக்கடியில் படமெடுக்கும் gopro வகை கேமராவை வாங்கி க்ளிக்கி வருகிறார்.

* சென்னை ட்ரா ஃபிக்கில் கார் ஓட்டியதில்லை. ஆனால், கேரளாவில் ட்ரைவிங் செய்வது கீர்த்திசுரேஷுக்கு பிடித்த ஜாலி லாலி. 

* ‘அனேகன்’ அமைரா, ஒரு ஷாப்பிங் ஷாம்பெயின். வெளிநாடுகள் செல்லும் போதெல்லாம் விதவிதமாக டிரெஸ்ஸை அள்ளி தன் பீரோவை
நிரப்புகிறார்!

* கிச்சனில் புகுந்து அம்மாவுக்கு உதவி செய்வது காஜல் அகர்வாலின் சைடு பிசினஸ். ஆனால், அதிகாலை யோகாவும், சாட்டிங்கும்தான் காஜலை கலகலக்க வைக்கும் கானா.

* ‘லிங்கா’ சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் என்றால் அத்தனை இஷ்டம். பிடிச்ச ஸ்பாட் மாலத்தீவு. டைம் கிடைக்கும்போது தீவுகளில் ஸ்கூபா டைவிங்தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்.