ஏரியில் கின்னஸ்!



-த. சக்திவேல்

அர்ஜெண்டினாவின் அழகை பிரதிபலிக்கும் புவனர்ஸ் அயர்ஸ் நகரத்தின் தென்கிழக்குப் பகுதியில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறது எபிக்யூன் ஏரி. கடலைவிட பத்து மடங்கு உப்புச் சுவையைக் கொண்ட இந்த ஏரியில் மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடுவதைப் பார்க்கவே ஆயிரம் கண்கள் வேண்டும். கடந்த வாரத்தில் 1941 பேர் அந்த ஏரிக்குள் ஒரே மூச்சில் இறங்கினார்கள். டைவ் அடிப்பதும், விதவிதமாக நீச்சல் சாகசங்களை செய்வதுமாக இருந்தனர். இந்த ஏரியில் உப்பு அதிகம் என்பதால் ஃப்ளோட்டிங் செய்வது சுலபமானது.

விளையாடிக்கொண்டிருந்த அந்த 1941 பேரும் திடீரென்று ஒரே மாதிரியாக ஃப்ளோட்டிங் செய்ய ஆரம்பித்தனர். மட்டுமல்ல. மனிதச் சங்கிலியைப் போல அத்தனை பேரும் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து அப்படியே நீரில் மிதந்தனர். இந்த மாதிரி இதற்கு முன் தைவானில் 634 பேர் ஒன்றாக நீரில் மிதந்து கின்னஸ் சாதனை செய்திருக்கின்றனர். அச்சாதனை இப்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது!